செவ்வாய், அக்டோபர் 23, 2012

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

நவராத்திரி ;.தீபாவளி;சூரசம்ஹாரம்.
முஹர்ரம்;ஈஸ்டர் ;

தீய சக்திகளை தேவ சக்திகள் 
அழிக்க முடியாது.
தெய்வமே நேரடியாக வரவேண்டும் 
என்ற 
தத்துவத்தின் சாரம்.

தேவ அரசன் இந்திரன் பதவி 
போகக்கூடாது என்பதற்கு ஓணம்.
வாமனாவதாரம்.
வரம்பெற்ற அசுரனால் 
சிவன் தலை வெடிக்கும் சூழ்நிலை.
மோகனாவதாரம்.
கல் அடி வாங்கிய  முஹம்மது நபி,
சிலுவையில் தொங்கும் ஏசு நாதர்.
இந்த உலக  வாழ்க்கையின் 
அதி பயங்கர நிகழ்வுகள்.
பின்னரும் நாம் 
ஊழல் பற்றி எழுதுகிறோம்.
லஞ்சம் பற்றி எழுதுகிறோம்.
அரசியல்படு கொலைகள் பற்றி ,
நீதிமன்றம் ஜாமீன் விடுதலை பற்றி.
இது நம் முட்டாள் தனம் அல்லாவா?
தெய்வ சக்திகளுக்கே இந்நிலை.
சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும்.
இது ஆன்மீக வரலாறின் சாரம்.


திங்கள், அக்டோபர் 22, 2012

பாரத நாடு பாக்கியவான் களுக்கு. பணக்காரர்களுக்கு வாழ்க ஜனநாயகம்.


பாரத நாடு பாக்யவான்களுக்கு.

பணம்படைத்தொருக்கு.
கல்வி வேண்டுமா?
மருத்துவம் வேண்டுமா/
நீதி வேண்டுமா?
கழிப்பறை வேண்டுமா?
கழிவு நீர் வடிகால் வேண்டுமா/
வீடு கட்டவேண்டுமா//
அங்கீகரிக்காமல் கட்டடம் 
கட்ட வேண்டுமா?
தண்ணீர் இணைப்பு வேண்டுமா/
பத்திரப்பதிவு வேண்டுமா?
மின் இணைப்பு வேண்டுமா?
பணம்!பணம்!பணம்!
அரசு ஆரம்பப் பள்ளிகளில் 
மாணவர்களைவிட 
ஆசிரியர்கள் அதிகம்.
அரசு மருத்துவ மனை 
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஊழல்!ஊழல்!ஊழல்!
லக்ஷரூபாய் ஊழல் மந்திருக்கு அழகல்ல.
பல கோடி  ஊழலே மந்திரிக்கு அழகு.
இருநூறு லஞ்சம் வாங்கும் கடைநிலை ஊழியருக்கு தண்டனை.
கோடிக்கணக்கில் ஊழல் செய்தால் 
ஜாமீனில் விடுதலை.
வாழ்க ஜனநாயகம்.

பாரத நாடு  பாக்கியவான் களுக்கு.
பணக்காரர்களுக்கு 
வாழ்க ஜனநாயகம்.

.இயற்கையின் நியதி ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

இயற்கையின் நியதி  ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

அகவை   கூடுகிறது.
ஆற்றல் குறைகிறது.
அன்பான குழந்தைகள்
அழகான பேரன் ,பேத்திகள்,
மகிழ்ச்சிக்கு  குறைவில்லை.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் .
இருப்பினும் மூப்பு,
தள்ளாமை,
இயலாமை.
அதனால் வரும் கோபம்.
உணவுக்கட்டுப்பாடு.
புதுவகை  உணவுகள்.
நம்காலக் கருத்துகள்.
நிகழ கால கருத்துகள்.
எண்ணெய்  தேய்த்து குளித்தல்.
சின்ன சின்ன விஷயத்திலும்
எவ்வளவு பெரியமாற்றம்.
சாப்பிடும் நேரத்தில்
உடல் நலத்திற்காக
சொன்னாலும்,
அதில் அக்கறை என்று தெரிந்தாலும்
என்ன பாப்பம் செய்தோமோ என்ற  எண்ணம்.


ஈர்க்கவில்லை.
உள்ளத்தில் எதோ சோர்வு.
ஊக்கம்   குறைந்ததாலோ,
என்னவோ,அனைவரும்
ஏளனம்  செய்வதுபோல்  ஒரு
ஐயம்.
முப்பதாண்டு   அகவை வேறுபாட்டால்,
காலத்திற்கேற்ற  அறிவு குறைவுதான்.
அறுபத்தைந்து ஆண்டுகளில் ஆன மாற்றம்.



நாம்படித்த  ஆத்திச்சூடி,கைவீசம்மா கைவீசு,
அம்மா சுட்ட தோசை   சொல்ல,
அவர்கள் தமிழ் வராது என்பதுபோல்
ஆங்கில ஏ ,பி சி,பாடல்
நமக்கு ஒவ்வாததுபோல்,நாம்சொல்வது
அவர்களுக்கும் ஒவ்வாமை ஆகிவிட்டது.

நடந்து சென்றால் நல்லது என்பது,சொல்ல முடியாது.
இப்பொழுது வாசப்படியில் நான்கு சக்கர வாகனம்,
அல்லது இரு சக்கரவாஹனம்.
நாம்பெசுவதேல்லமே காலத்திற்கேற்றார் போல் இல்லை.

இப்பொழுது என்  தாத்தாவின்  நினைவு.
அவர் காந்தி கதை கூறி,
பென்சில்  சிறிதானாலும் எழுதச்சொல்வார்.
வெள்ளைக்காகிதம்  வீணாக்கக் கூடாது என்பார்.
ஒருபென்சில்வாங்கி  இரண்டாக ஒடித்துத்
தருவார்..

அப்பொழுது தாத்தாவின் மீது எரிச்சல்  வரும்
.
இன்று  சிக்கனம் பற்றி பேச முடியாது.

அறிவியல்  வளர்ச்சி.தொலைகாட்சி,கணினி
அதிகம் பார்க்காதே;கண் கெடுதல் என்றால்,
தாத்தாவின் மீது நான் பட்ட எரிச்சல் தானே ,
 பட்ட எரிச்சல்  தானே  பேரன் பத்திகளுக்கும்.
 அவர்களுக்கும்
தாத்தாவின் மீது வரும்.
இவ்வாறு  பல  .

இயற்கையின் மாற்றங்கள்.
அறிவியல்மாற்றங்கள்.
அகவை கூடி ஓய்வு பெறும்போது,
அலைபாயும்  பாயும் எண்ணங்கள்
அறியாமை,ஒவ்வாமை,
ஓஹோ! இது தான்

காலன்  வரும் நேரம்.
காலனை விரும்பி ஏற்கும் நேரம்.
கடமை முடிந்து விட்டது என
நீ   நிம்மதியாகப் போகலாம்
என    சக வயதினர்  பேசும் காலம்.
இயற்கையின் நியதி .
பெருசு அனைத்தும் செய்து சென்றுவிட்டார்.
கல்யாணசாவு  என சமாதனம் செய்து கொள்ளும் காலம்.
இயற்கையின் நியதி
ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

கோடிக்கணக்கில் பணம் ஏன் சிந்திப்பீர். செயல்படுவீர்.

கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர். செயல்படுவீர்.

மதங்கள் 
மத நம்பிக்கைகள்,
கடவுள் 
கடவுள் நம்பிக்கைகள் 
மனிதனை 
மனிதானுக்குகின்றன.

ஆனால் 
அந்த நம்பிக்கைகள் 
சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
ஆனால் 
இன்று 
அவைகள் மூடநம்பிக்கைகளாகி 
வாணிகமாகிவிட்டன.

இன்றைய செய்தி.
ஒருஆஷ்ராமத்தில் 
குருபாத தீர்த்தம் என ஒரு மயக்க மருந்தளித்து 
ஒரு பெண்ணை பலர் சேர்ந்து கெடுத்துள்ளனர் 

ஆஷ்ரமங்கள்  ஆஸ்திகள் சேர்த்ததுமே 
இந்தமாதிரியான   செயல்கள் தொடங்க ஆரம்பிக்கின்றன.
இன்றைய கலியுகத்தில்  இறைவழிபாடும் 
ஒரு வணிகமயமான ஏமாற்றும்   ஸ்தலமாக 
மாறிவருகின்றன.
இன்றும் சக்திவாய்ந்தசித்தர்கள்  உள்ளனர்.
உண்மையான பக்தியால் இல்லத்திற்கே ஏதோ 
ஒருவிதத்தில் நம்மை ரட்சிப்பார்.
ஆகையால் 
ஆஸ்ரமங்கள் நாடிச்சென்று ஏமாறாதீர்கள்.
பணம்பத்தும் செய்யும்.
சிறைசென்ற சாமியார்கள்  பண  பலத்தால் 
சஞ்சரிக்கின்றனர்.
சாமி யார் என்ற நிலைக்கு வந்தபின் 
கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர்.
செயல்படுவீர்.


மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம், நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

அல்லது

பெற்றோர்களின் அவசரமா?

அல்லது  இயற்கையின்  உந்துதலா?

பெற்றோர்கள் தங்கள் கடமை முடிக்கவேண்டும்  என்ற கடமை உணர்வா?

காதலிப்பதாலா?

 அனைத்து  திருமணங்கள்  ஆனந்தத்தில் முடிகிறதா?

மண  முறிவு பெறப்படுவது   ஏன் ?

குழந்தைகள் பிறப்பு ,வளர்ப்பில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?
படித்த  மேதைக்கு  அறிவில்லா  குழந்தை.
படிக்காத  அறிவிலிக்கு  குழந்த அதி மேதாவி.

ஏழையின்  குழந்தை பணக்காரனாகிறான்.

பணக்காரனின் குழந்தை ஏழை ஆகிறான்.

மருத்துவரின்குழந்தைநோயாளி ஆகிறான்.
பணம் படைத்தோரும்  மன வேதனையில் உள்ளனர்.

இதனால் தான் ஜோதிடக்கலை வளர்கிறது.
சாமியார்கள் வளர்கிறார்கள்.
இதில்  உண்மையானவர்கள்  மரத்தடியிலேயே வாழ்கின்றனர்.

போலிகள்  கோடீஸ்வரனாகின்றனர்.

மக்களிடம்  இறைவன் மேல் உண்மையான  பக்தி,நேர்மை ,சத்தியம்
இருந்தால் தனக்கு  வரும்  சோதனைகளில் நிம்மதி அடையலாம்.

கலி யுகத்தில்   நாம ஜெபமே போதும்.
அங்கிங்கெனாதபடி  எங்கெங்கும்  ஆனந்த பூர்த்தியாய்  இருக்கும்
ஆண்டவனை  ,சத்குருவை  வீட்டில்வழிபட்டால்  போதும்.

கடன்வாங்கி,தானம் வாங்கி ஹோமங்கள் ,யாகங்கள் செய்ய முடியாது.
பணமுள்ளவர்களுக்கே  பாப விமோசனம்  என்பது தான் மூடநம்பிக்கை.

சற்றே மனதில் சிந்தியுங்கள்.நம்மிடம்   உண்மை,நேர்மை,சத்தியமிருக்கிறதா?
என்று. உலக  வாழ்க்கையில்  இது  சாத்தியமா? என்று வினவினால்  துன்பமே.

தூயமனத்தில் இறைவன் மட்டுமே இருப்பான். செய்த  பாபங்களை விட்டுவிடுங்கள்.

நீங்கள் எந்த மதத்தில்  தோன்றிநீர்களோ,
உங்கள்  பெற்றோர் எந்த இறைவனை 
வழி பட்டனரோ,
அந்த இறைவன்பெயரை  மட்டும் சொல்லுங்கள்.
கடமையாற்றுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் 
"நாம ஜபம்" செய்யுங்கள்.
குறுக்குவழியில்
 முன்னேறுபவர்களை ப் 
பார்க்காதீர்கள்.
உலகில் யாருமே மன நிறைவுடன் இல்லை.

இறைவன் பெயரை முடிந்த அளவுக்கு 
சொல்லுங்கள்.
மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.
கலியுகம்=சுய சிந்தனை 
உள்ளவர்களுக்கு.
நேர்மையாளர்களுக்கு.
தன்  இல்லத்திலேயே 
நாம ஜபம் செய்வோர்களுக்கு.
வெளியில் அனைத்துமே
வணிகமே.
கபீர் தாசர் :
பூவில்  மண மிருப்பதுபோல்,
கஸ்தூரி மான் வயிற்றில் 
மணமுள்ள  கஸ்தூரி இருப்பதுபோல்,
கடவுள்  உன் மனதிற்குள் இருக்கிறார்.
உனக்குள்  இருக்கும்  இறைவனை அறியாமல்  வெளியில் தேடுகிறாய்.
இதற்குப் பொருள்  இறைவன் மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் அளித்துள்ளான்.உன் இறைவனை உனக்குள் தேடு.
வெளியில் தேடினால் பொருளாதாரக் கேடு.
அதில் தானம் ,தர்மம் செய்.










விதி என்பது வலியது என்றனர்.---சிலர் விதியை வெல்லலாம் என்றனர்.


விதி  என்பது வலியது என்றனர்.---
சிலர் விதியை  வெல்லலாம் என்றனர்.

மதி எல்லாம் அதிக பட்சம் குற்றங்கள் 
புரியவே?
மதிமயக்கும் விதி என்பர்.
அதனால் தான்  ஊழல் புரிந்தோர்,
ஊழலின் எல்லைக்கே சென்று--இன்று 
செய்தித் தாளில் நீ ஊழல் -நான் ஊழல்,
அவன் ஊழல்,ஊழல் ஊழல் என்று சொல்பவனும் 
ஊழலுக்குத் துணை போவோர் சிலரின் 
ஊழலை மறைப்பதாகக்  குற்றச்சாட்டு.
குற்றம்புரிந்தவன்  வாழ்க்கையில்  
நிம்மதி  எது?
ஆனால்விதி மதியை மயக்கி 
மேலும்மேலும் குற்றங்கள் .
நடந்த  வண்ணமாக உள்ளன.
அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??

அல்லது  விதியென  துன்பங்களை  அனுபவிப்பார்களா/
அப்படித்தானே அயலார் ஆட்சியையும்
இப்பொழுது  மன்மொஹன்சிங்கை ஆட்டிவைக்கும்
தலைவியையும் ஏற்று வாக்களிக்கின்றனர்.

வெள்ளி, அக்டோபர் 19, 2012

கும்பகர்ணனின் சொற்பிழை அவனின் வரம் தூக்க மாக மாறியது.




கும்பகர்ணனின்  சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக  மாறியது.


நரிவலம்போனால் என்ன?
 இடம்போனால் என்ன ?
கடிக்காமல் போனால் சரி.
இது பழமொழி.

கண்கள் பேசாது.
பார்க்கும்.
காது கேட்கும்.
பேசாது.

நாக்கு  இரண்டுமே செய்யாது .
ஆனால் இஷ்டப்படி பேசும்.
பார்க்காததையும் பேசும்.
கேட்காததையும் பேசும்.

கபீர்தாசர்  சொன்னார்:
நாக்கு  ஏதாவது பேசும்.
வாயிக்குள் சென்றுவிடும்.
அதன்பலனாக
செருப்படி  தலையில் விழும்.

தலை எழுத்தை மாற்றுவது
ஒரு சொல்.
சொல்லின் ஆழம் ,
சொற்பிழை
பல குற்றங்கள்
புரியும்.
ஆகையால் தான்
மகா பாரதப்போரில்
அஷ்வத்தாமா  என்ற பெரும் குரல்
யானை  என்பதை மறைத்து
குரு  துரோணரின் மரணத்திற்கு
காரணமாகியது.
இது ஒரு ராஜ தந்திரம்.

கும்பகர்ணனின்  சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக  மாறியது.

கன்னி என்ற சொல் கனியாக விழுந்ததால்
பாஞ்சாலி  ஐவருக்குப்
பத்தினி ஆனாள்  என்ற ஒரு கதை.
சொற்பிழை    பெரும் தவறாகிறது.

பகலில் பார்த்துப்  பேசு;
இரவில் அதுவும் பேசாதே என்பதும் .
பழமொழி.

பொருள் குற்றம்
தூக்கம்
 துக்கமாக மாறும்.

துக்கம்  தூக்கமாக  மாறும்.

சொற்பிழை  நல்லது நடக்கவும் உதவும்.

என்  என்பதை ஏன்
என்று  மாற்றிப்பாருங்கள்.
அண்ணா  சொன்னதுபோல்
நான் என்பதை  நாம்  என்று
சொன்னால்  ஓட்டும்.

இந்நிலையில்
பலகட்சிகள் உரு ஆவதை
"என்"கட்சி என்ற நிலைமாறி,
"நம் நாடு " என்ற
எண்ணம் வந்தால்.
நாடு  முன்னேறும்.
"நான்"  தான் நாட்டைத் திருத்த
முடியுமென்று
காளான் போல்  தலைவர்கள்  தோன்றுவது,
நாட்டின் நலனுக்கா?
அமைதிக்கா?
நாட்டின் நலம் என்றால்
ஒரே  திட்டம்.
ஒரேகொள்கை.
அதனால் தான்
அனைவரும்
காந்திபெயரை,
காமராஜர் பெயரை
அண்ணா பெயரை
சொல்லி  கட்சி நடத்துகின்றனர்.

வள்ளுவர்  சொல்வதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம்:

நாடென்பது நாடா வளத்தன; நாடல்ல
நாட வளம்தரும்    நாடு.

தீயினர் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே,நாவினால்
சுட்ட வடு.


செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் ,அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

இனிய உளவாக இன்னாது கூறல் .கனி இருக்க
காய் கவர்ந்தற்றன்று.








रोज़ ख़बरें आती हैं, क्या देशोन्नती की? नहीं।नहीं। भ्रष्टाचार की। इसमें आश्चर्य है क्या?

रोज़ ख़बरें आती हैं, क्या देशोन्नती की? नहीं।नहीं। भ्रष्टाचार की। इसमें आश्चर्य है क्या?


रोज़ ख़बरें आती हैं,
क्या देशोन्नती की?
नहीं।नहीं।
भ्रष्टाचार की।
इसमें आश्चर्य है क्या?
तटस्थ  भ्रष्टाचार के विरुद्ध 
बोलनेवालों पर भी 
भ्रष्टाचार का कीचड।
एक स्वर के  भ्रष्टाचार का नारा 
आज अलग अलग हो गए।
दो प्रधान दल बाघ है तो 
बदल-बदलकर साथ देनेवालेछोते दल है सियार।
आज खून की आवाज हैं;धमकी है।

स्वामीजी  बोले 
उनका शिष्य 
जेल  गया;मिथ्या पासपोर्ट-वीसा के अपराध्  में।
केजरीवाल बोल रहे हैं;
अब उनपर आरोप हैं 
वे कुछ नेताओं के भ्रष्टाचार छिपा रहे हैं।
एक दुसरे तू-तू मैं -मैं  कर रहे हैं।
अन्ना हजारे के विरद्ध एक अध्यापक का अनशन 

पता नहीं  सच-क्या है/झूठ  क्या है/?

जोभी हो  देशोन्नती   में 
बाधा पड  रहीं है।
जागो!युवकों !
जागो! बचाओ!
भारत को।
देश की उन्नत तो हुयी है बेशक।

पर 
सब देशवासियों को नहीं मिली आजाद  का सुख।
भ्रष्टाचार से देश को बचाने की  शक्ति  हैं 
युवकों में।
अतः जागो;
बचाओ  देश को 
भ्रष्टाचार केसंक्रामक रोग् से।


உண்மையெது பொய்யது ஒன்னும் புரியலே, நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.

உண்மையெது பொய்யது  ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.


இளைஞர்  சமுதாயமே!

உண்மை எது?பொய்  எது?
இயற்கையின் சக்தியே!
முன்னேறின் நாட்டின் 
தொத்து  நோய் ஊழல்.
இதிலிருந்து  நாட்டைக் காப்பாற்று.!


மனம்  பலவற்றை  சிந்திக்கிறது.


ஆன்மீக  சிந்தனைகள் 
பற்றற்ற  வாழ்க்கை பேசி.
பகட்டாக  வாழும்  காட்சிகள்.

சனாதன தர்மத்தில் இல்லாத 
பழக்கங்கள்  ஏற்படுத்தி,
கோடிக்கணக்கான பணம் 
சமுத்திரத்தில்  கரையும் காட்சி.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போரும் 
சிலஊழல் பேர்வழிகளை 
மறைக்கும்  காட்சி.

ஊழலுக்கு  உரத்த குரல் கொடுக்கும் கேஜரிவால், சிலரின் நில  ஊழல் மறைத்த செய்தி.

பதஞ்சலி சீடரின் கடவுச் சீட்டு ஊழல்.
கட்கரே வின் நில ஊழல்.
அதைவெளியிட்டவர் ,
பவாரின் நிலா ஊழல் மறைத்த செய்தி,
அரசியல் என்பது சாக்கடை.
அதை தூர்வாரினாலும் 
நாற்றம் தான் மிஞ்சும்.
 ஆகையால் தான் நல்லவர்கள்,
ஓட்டுப்போடுவதில்லை.
எழுபத்தைந்து சரசரியாரியாக 
அறுபது விழுக்காடு ஓட்டில் 
நாடுஊழல் மயம்.
 உண்மையெது பொய்யது 
ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.
இந்திய காங்ரசும்  ஊழல்,
பாரதீய ஜனதாவும்  ஊழல்.
இரண்டும்புலி என்றால்,
இரண்டுடனும் மாறி மாறி 
கூட்டணி   வைக்கும் 
மாநிலகட்சிகள்  நரிகள்.

புலி அடித்துப்போடும் 
இரைக்காக பின் செல்லும்
 கூட்டங்கள்.
ஆகையால் தான் நாட்டின் நலத்தைவிட அதிகம் 
கட்சிகளும்,
தலைவர்களும் 
தொண்டர்களும் 
பிரிந்து  நாட்டின் ஊழலில் 
பங்கு போடுகிறார்கள்.
எதிர்கால  இளைஞர்களே!
எங்கள் அகவை கூடிவிட்டது.
கூட்டுவைக்கும்  மந்தணம்   அறிய.
நீங்கள் சிந்தித்து செயல் படுங்கள்.
நாட்டின் உயர்வு உங்கள் கையில்.





வியாழன், அக்டோபர் 18, 2012

வையக அமைதிக்கு, சனாதன தர்மம் கூறிய கூற்று, மெய்யாகும் காலம் வரும். ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.

வையக அமைதிக்கு, சனாதன தர்மம்   கூறிய  கூற்று,
மெய்யாகும்  காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.


அகவை  கூடக் கூட ,
அறுபதுக்குப்பின் ,
அறிவுடன் வாழ்ந்தோமா?
அறிவிழந்து  வாழ்ந்தோமா?
ஆஸ்தி சேர்த்தோமா?
அன்புச் செல்வங்களுக்கு 
ஆதரவளித்து,
அறிவு புகட்டி,
அவர்கள் அகம் மகிழ வளர்த்தோமா?
ஒய்வு பெற்று  ,
ஓய்வூதியம் பெற்றாலும்.
நன்மக்கள் பெற்று 
செல்வச் செழிப்புடன் 
வாழ்ந்தாலும் .
எதோ ஒரு மனக்குறை மனதில் 
எதோ ஒரு ஓரத்தில் 
தோன்றுகிறது.
காரணம்  அறிவியல் வளர்ச்சியா?
இளம் தலைமுறையின் ,
அறிவுமுதிர்ச்சியா?
கணினி இல்லா
 காலத்தில் வளர்ந்து,
இன்று கணினி மூலம்,
பெறு ம் அறிவு,தொடர்பு,
அவ்வையின் 
கற்றது கைமண் அளவு,
கல்லாதது உலக அளவு 
என்ற மொழி  காலத்தால் அழியாதது.
மடிகணினி   தட்டினால்,
அறிவில் நாம் எவ்வளவு 
ஞான சூனியமாக வாழ்ந்தோம் 
என்ற ஞானம் பெற்றேன்.
நமது குழந்தைகள்.
தங்கள் சட்டைப்பையில் ,
அகிலத்தை அடக்கி வைத்துள்ளனர்.
கைபேசியில்.
வணிகத்தொடர்பு 
அரை நொடியில்,
வேலைவாய்ப்பு  நேர்காணல்,
விண்ணப்பம் அனுப்புதல்,
தங்கள்  பள்ளி நண்பர்கள்,
கல்லூரி  நண்பர்கள்,
பல காத தூரம்,
சீனாவில் இருந்தாலும்.
சிங்கப்பூரில் இருந்தாலும்,
ரஷ்யாவில் இருந்தாலும்.
அமெரிக்காவில் 
இருந்தாலும்,
இந்தியாவின் ஒரு 
குக்கிராமத்தில் 
இருந்தாலும் 
முகம்  பார்த்துப் பேசும் 
உன்னத வளர்ச்சி.
நாம் வாழ்ந்த பழைய காலம்,
ஒரு குறுகிய வட்டம்.
எத்தனை எத்தனை குறுகிய 
எண்ணங்கள்.
மதங்களின் பெயரால்,
ஜாதியின் பெயரால்.
இன்று பரந்த உலகம் காணும் போது ,
வையகம் வாழ்க.
வையகம் ஒரு குடும்பம்.
மனித இனம் ஒன்று
சூரியன் ஒன்று.
சந்திரன் ஒன்று.
வையக அமைதிக்கு,
சனாதன தர்மம்   கூறிய 
கூற்று,
மெய்யாகும் 
காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.