திங்கள், அக்டோபர் 15, 2012

விழித்தெழும் காலம் எப்போது.?


பாரத  நாடு 

பாரத மக்கள் எப்பொழுதுமே
தங்கள் தலைவர்களுக்காக ,
தங்கள் அரசர்களுக்காக,
உயிரைவிடுபவர்கள் .

தங்கள் அரசனுக்காக
முதுகில் அடிபடாமல்
நெஞ்சில் அடிபட்டு 
சாகும்  தன்  ஒரே மகனைப்பார்த்து 
 மகிழ்பவள் வீரத்தாய்.

அந்த மன்னன் எதற்காகப் போரிட்டான் 
,நாட்டின் நலனுக்கா 
தன்   அரண்மனை வளத்திற்கா
,அந்தப்புர அழகுக்கா 
  என்று கூட 
சிந்திக்காத மக்கள்
.அழகான அரசகுமாரி
மன்னன் ஆசைப்பட்டான் 
என்பதற்காக பல்லாயிரமான  வீரர்கள்
தன் உயிர்த்தியாகம் செய்த நாடு.
குடி ஆட்சியிலும் அதே பரம்பரை ரத்தம் ஓடுகிறது.

தான் விரும்பும் நடிகனின்
நிழற்படத்திற்கு பாலாபிஷேகம்.
தேங்காய் உடைப்பு.
தன்  வீட்டில் சாப்பாடு
 இல்லை என்றாலும் .
வீட்டில் உள்ளோர்
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லை.
தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னா 
டேக்  இட் பாலிசி தான்.

சினிமா டிக்கட் நூறு இருநூறு  என்றாலும் 
திருட்டுத் தனமாக  ஒரு டிக்கட் 
ஆயிரம் இரண்டாயிரம் என்றாலும் 
வாங்கி திரைப்படம் பர்த்து மகிழும் கூட்டம்.
அந்த திரைப்பட அரங்கு வாயிலில் 
பசிக்கு அழுகும் குழந்தைக்கு 
உதவாத உயர்ந்த உள்ளம். 
அங்கு  கோடியில்  புரள்வது 
கருப்புப் பணம் சேர்வது 
தெரிந்தாலும் 
ஊழல் வளர்க்கும் கூட்டம்.

சேவகம் செய்தே வளர்ந்த   மக்கள்,
நம் மக்கள்.
தலைவர்களுக்கு  பிரதிபலன் 
பாராமல்    தொண்டு  செய்யும்  உள்ளம் படித்தவர்கள்.
விழித்தெழும் காலம் எப்போது.?
தங்கள் தெரு குண்டும் குழியுமாக 
இருக்க 
இடிக்க கட்ட ,கட்ட இடிக்க 
என்று 
தங்கள் வரிப்பணம் 
வீணாவதை  எதிர்த்துப்
  போராடும் 
காலம்  
எப்போது?


ஞாயிறு, அக்டோபர் 14, 2012

பாத்திரம் அறிந்துபிச்சை போடு; இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

தானம்  என்பது மற்றவர்களுக்கு 

கொடுப்பது.
இது  ஒரு தர்மம்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு 

கொடுத்து உதவு வது  தானம்.

இந்த கலியுகம்  கர்மயுகம்.
உன்  கர்மங்களை  செய்.பலனை எதிர்பாராதே என்பது  இறை தத்துவம்.

ஆனால் ,இந்த உண்மை புரியாமல்,
தன்  கஷ்டங்கள்  ,துன்பங்கள் தீர 
சாமியார்களை சந்தித்து தானம் அழிப்பது,ர கோயில் உண்டியல்களில் போடுவது  தானம் ,புண்ணியம் என்றே 
ஒரு  நம்பிக்கை. அதனால் போலி சாமியார்களும்,ஜோதிடர்களும்,குறி சொல்பவர்களும் ஏமாற்றி  வருகிறார்கள்.கோயில்கள் பெருகிவருகின்றன.
ஆண்டவன் பணக்காரர்களை படைத்து 
சோதிக்கிறான்.
பெரும்பாலும் பணம்படைத்தவர்களுக்கு 
சந்தானபாக்கியம்  குறைவு.
எத்தனையோ கோடீஸ்வரர்கள் 
குழந்தை இல்லாமல் சொத்துக்களை 
ஆஷ்ராமங்களுக்கு எழுதிவைப்பதை 
புண்ணியமாக கருது கின்றனர்.
அவர்கள்  மகிழ கர்ம யுகம் என்ற தானம் செய்யவேண்டும்.

கிராமங்களில்  ஒளிபெற சூர்ய  மின்சாரம் தாயரிக்க  ஏற்பாடு செய்யுங்கள்.
தோழிகள் வளர அல்ல.
தொழில் வளம்பெற வேண்டும்.

விவசாய மேன்பாட்டுக்கு உதவுங்கள்.

நீர்வளம் பெருக கிராமங்களில் மழை 
நீர் சேமிப்பு குளங்கள் வெட்டுங்கள்.

கோயில்  காணிக்கைகள் நாட்டு  நலத்திட்டங்களுக்கு  பயன் படுவதில்லை.

ஏழை மாண வர்களுக்கு உயர் கல்விக்கு உதவுங்கள்.

மருத்துவ வசதி செய்து கொடுங்கள்.

பலருக்கு வேலைவாய்ப்பு தரும்  நிறுவனங்கள்  அமைத்துக்கொடுங்கள்.

எது செய்தாலும் தங்கள் நேரடிபார்வை அவசியம்.

சாமியார்களுக்கே  தங்க அரியணை விரும்பும் காலம்.

ஆகையால் தான் தமிழில் ஒரு பழ மொழி :
பாத்திரம் அறிந்துபிச்சை போடு;
கோத்திரம் அறிந்து  பெண்ணைக் கொடு..

ஆண்டவன் தனக்கே மீண்டும் மீண்டும் வைரக்கிரீடம்  வேண்டும் என கேட்கவில்லை.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

உங்கள்ரூபாய்கள் உண்மையாக கஷ்டப்படுபவர்களுக்குப் பயன் படட்டும். ஆயிரக்கணக்கனவர்கள் 
உங்களை வாழ்த்தி  பிரார்த்திப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்.

உண்டியலிலும்,ஆஷ்ரமங்களிலும் கொட்டி   ஊழலை  வளர்க்காதீர்கள்.
அரசியல்கட்சிகளுக்கு எதற்குப் பணம்.
ஊழலை ஒழிக்க செயல் திட்டங்களை நிறைவேற்றுங்கள்.
நாட்டுக்கு தொண்டு செய்யும் கட்சிகள் 
தன்  சொந்தபணத்தில்  செய்யட்டும்.

ஆடம்பர கட்சி அலுவலகங்கள் 
ஊழலை வளர்க்கும்.
உங்கள் நன்கொடை  பல்லாயிரம் பசிப்பவர்களுக்கு உதவட்டும்.
வீண் ஆடம்பர சமாதிகளுக்கும் ,ஆடம்பர கட்சி ஊர்வலச் செலவுகளுக்கும்  பயன்பட வேண்டாம்.
ஆண்டவன் அருள்பெற்று  வரும் 
பணம்  எளியோருக்கு உதவட்டும்.

நீங்கள் ஆண்டவன் கிருபைக்கும் .
வாழ்வியல்  இன்பத்திற்கும் .மன நிறைவிற்கும்   உரியவர்களாவீர்கள்.

வீடுகள்  கட்டி  குறைந்த வாடகைக்கு விடுங்கள். சிற்றூர் களில் .









சனி, அக்டோபர் 13, 2012

தினசரி செய்திகளும் எனது சிந்தனைகளும்


தினசரி செய்திகளும் எனது சிந்தனைகளும் 

1.   பச்சிளம்  குழந்தை இரக்கமின்றி சாலை ஓரத்தில் 
கிடந்தது.

        மகாபாரதம் தொடர்கிறது.
கர்ணன் ஆற்றில் வீசப்பட்டான்.

2.காதலின் மோகத்தால் காதலியின் கணவன் கொல்லப்பட்டான்.
ஷேர்ஷஹைக் கொன்று ஷாஹ்ஜஹான் மும்தாஜை கவர்ந்தான்.

ராவணன்  சீதையை தூக்கிச் சென்றான்.

3.தங்கையின் காதலனை அண்ணன் கொன்றான்./தந்தை.

எனக்கு மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியர் சொன்ன  கதை நினைவிற்கு வருகிறது.
அவர் சொன்ன முறை ஒரு காட்சியை முன் வைத்தது.

ஷாஹ்ஜஹான் மாளிகையின்  அந்தப்புரம்.
அவள் மகள் தன்  காதலுடன் 
  ரஹசியமாக   பேசிக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது தன்காதல் மனைவிக்கு
  தாஜ்மஹால் கட்டிய ஷாஹ்ஜஹான் 
அங்கு வருகிறார்.
 தந்தை வரவை  அறிந்த மகளும்
 பேரரசர் வருகை அறிந்த 
 காதலனும் அஞ்சுகின்றனர் .
ஓடி ஒழிய அங்கு இடமில்லை.

காதலன் அங்குள்ள பெரிய வெந்நீர்
 கொப்பரையில் ஒளிந்து கொள்கிறான்.
பாதுஷாஹ்  இதை கவனிக்கிறான்.உடனே பணியாட்களை அழைத்து  அந்த  கொப்பரையை  அடுப்பில்வைத்து  தீ மூட்டச் சொல்கிறான்.
காதல் மதிப்பை அறிந்த மன்னவனின் இரக்கமற்ற செயல்.
.மகள் கண்ணீர் மட்டும் விடுகிறாள்.
 அங்கு அவள் காதலன் வெந்து மடிகிறான்.
 இது வரலாறு.

4. மகளைகாதலித்த காதலனுடன்  தந்தை சண்டை.

சிவபெருமான் தக்ஷனுடன் சண்டை.வள்ளியின் பெற்றோருடன் முருகப்பெருமான் சண்டை.

ஆகையால் காதலும் பிணக்கும் சண்டையும் கொலையும் ஆதிகாலத்தில் இருந்தே வருகின்ற கதைகள்.

5.ஹிந்தி  இலக்கிய வரலாற்றில் 
 பக்திமார்க்கம் ஒரு பொற்காலம்.
அதில் அன்பு மார்க்கம் என்று ஒன்று
.இறைவனை அடைய ஞானத்தைவிட
 அன்பே பிரதானம் என்பது.
அதில்முக்கிய கவிஞர் 
மாலிக் முஹம்மது ஜாயசி 
.அவர் எழுதிய" பத்மாவதி"  மகா காவியத்தில்
  ராஜா ரத்னசேன்  தன் காதலி  பத்மாவதிக்காக  கடும்போர் புரிகிறான்.
காதலியை பல தடைகள் மீறி அடைகிறான்.அவ்வாறே 
 இறைவனை அடைய முயலவேண்டும்
  என்பதே காவிய நோக்கம்.

ஆகையால் காதல் தெய்வத்தை அடைவதாக இருக்கக்கூடாது.தெய்வத்தன்மை  கொண்டதாக  இருக்க வேண்டும்.









ஆன்மீக நாடு இந்தியா.

ஆண்டவனை 
கீழுள்ளவாறு 
காட்டினாலும் 
ஆதீனங்களிலும் 
ஊழல்.
அரசியல்வாதிகளிலும் ஊழல்.
அதிகாரிகளிடமும் ஊழல்.
ஆன்மீக நாடு இந்தியா.
ஆலயங்களிலும் ஊழல்.

வெள்ளி, அக்டோபர் 12, 2012

மக்களின் நன்மைக்கு பயன் படுத்துங்கள்மக்களுக்காக மக்கள் ஆட்சி.

மக்களுக்காக மக்கள் ஆட்சி.


நாட்டில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஆனால் ,
சிலர் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கின்றனர்.
அதில் ஏற்படும்  மகிழ்ச்சி ,
கம்பீரமாக  மேடை போட்டு  சொல்லமுடியுமா/?
கோடிக்கணக்கில் பணம்
வரிகட்டா பணம் வெளிநாட்டு வங்கியில்
சேமிக்கப்பட்டுள்ளது என்பதை
அலங்கார  மேடையிட்டு
அகங்கார  தலைவர்கள்
 முழங்க முடியுமா?
மன சாட்சி  உள்ள  அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:
ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பொதுமக்களும்  சாக்கடை ஓடும் 
சாலையில் நடக்கின்றனர்.
அந்த சாலை பராமரிக்க பணமில்லை.
 அண்ணா வளைவு கலைஞர் வைத்தது என இடித்து பின்னர் எம்.ஜி.ஆர். திறந்தது என அறிந்து மீண்டும் நிலைநாட்ட கோடி.
சமாதி புதுப்பிக்க  கோடிகள் .
கண்ணகி சிலை இடிக்க ,மீண்டும் வைக்க கோடி .
ஆனால் ,வரி  செலுத்தும்  மக்களுக்கு 
சாலை இல்லை.
குடிதண்ணீர் இல்லை.
மின்சாரமில்லை.
மன்னராட்சியில் தான் ராஜ தர்பார்.
மக்களாட்சியிலுமா  இப்படி/?
மக்களின் வரிப்பணம்
 மக்களின் நன்மைக்கே.
அரண்மனைகட்டவும்,அந்தப்புரம் கட்டவும்  அல்ல.
தலைமைச் செயலகம் மாற்றம்.
துக்ளக் தர்பாரா?
கோட்டூர்புரம்   நூலக மாற்றம்.
எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு,
வரிப்பணம்.
மக்கள் ஏமாளிகள்.
தலைவர்கள் இரக்கமற்றவர்கள்.
மடிப்பாக்கம் சாலைகள் 
பள்ளி செல்லும் குழந்தைகள்  படும் அவஸ்தை.
பாதாசாரிகள் படும் அவஸ்தை.
சுகாதாரக்கேடு.
இதற்கெல்லாம் 
நடவடிக்கை இல்லை.
குப்பை;நாற்றம்;
மகிழ்ச்சியில்லா மக்களின் வரிப்பணம் 
மன சாட்சி இல்லாமல் 
பணப்பெட்டிக்காக.
மரணம் நிச்சயம்.
இயற்கையின் சக்திக்கு 
பயந்து  கிடைத்த பதவியை 
மக்களின் நன்மைக்கு 
பயன் படுத்துங்கள்.







வியாழன், அக்டோபர் 11, 2012

மதங்களின்புனிதநூல்கள்அன்றாடம்படிக்கப்பட வேண்டும்.



மதங்களின்  புனித நூல்கள் அன்றாடம் படிக்கப்பட வேண்டும்.




உலகுக்கு  வேண்டிய  அனைத்தும்
 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே
உலகின் அனைத்து  மதங்களின் புனித நூல்களில்
கூறப்பட்டுள்ளன.
வேதங்கள்,குரான்,பைபிள் அனைத்தும்
தினமும் மீண்டும் மீண்டும்  படிக்க வேண்டியவை.
அந்நூல்களை ஆழ்ந்து புரிந்து படித்தால்
மனித நேயம் வளரும்.
ஹிம்சை எண்ணங்கள் வளராது.
மனித உயிரை  எடுக்கும் இரக்க மற்ற  செயல்கள்
நடைபெறாது.
எந்த மதமும் மற்ற  மாற்றுக்கருத்துள்ளவர்களை
 கொன்று குவித்து
நீ மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று
 போதிப்பதில்லை.
மற்றவர்களை  வெறுத்து ஒதுக்கிவிடு
என்றும்
கூறுவதில்லை.
அவ்வாறு   கூறினால்
 அந்த மதம்  ஏற்றுக்கொள்ள முடியாது.
மனிதன நேயத்தையும்,ஒற்றுமையையும் ,அஹிம்சையும்
பரப்பிய ஒரு 14வயது சிறுமி சுடப்பட்டது
ஒரு வெறிச்செயல்.
அல்லா ! அவர்கள் மனம் திருந்த ,
அந்த சிறுமி உலகில் நல்லனசெய்ய
உயிர்பிழைக்க
தொழுவோம்.பிரார்த்திப்போம்.ஆராதிப்போம்.
*********************************************************
இறைவன்

அறிவுப்புரட்சி.
அறிவியல் புரட்சி,
அரசியலில் புரட்சி.
ஆகாயத்தில் ஆய்வு.
ஆற்றலில் புரட்சி.
ஆழ்கடல் ஆராய்ச்சி
அனைத்தும் செய்தாலும்
மனிதனிடம்
ஒரு பயம்.
பதட்டம்.
புதியதை
அறியாததை,
புரியாததை
தெரியாததை
தெரிந்து
அறிந்து
அடைந்து
மீதம்
உள்ளதோ
மன நிறைவற்ற நிலை.
பற்றற்ற நிலையிலும்
ஒரு பற்று.
நாம் அனைத்தும் செய்தோம்.
  புலன்களுக்குப்புலப்படா
ஆற்றல்  நம்மை ஆட்டிவைத்தது.
இப்பொழுது
ஐம்புலன்களும்
அடங்கும் நேரம்.
ஆடிய ஆட்டங்கள்,
பாடிய ஆட்டங்கள்,
உற்றார் உறவு
சொத்து சுகம்
அனைத்தையும்
துறந்து
மண்ணில்  புதைந்தோ
தீயில் எறிந்தோ
மற்றவர்கள்  காண முடியாமல்
ஆகும் இயற்கை நிலை.
சிலரின் உற்றார் ,உறவினர்கள்,
இறைவனாக ஆராதிக்கலாம்.
போற்றலாம்.
ஆனால்
அகிலத்தில் இருக்கப்போவதில்லை.
அப்பொழுது தான்
இறைவன்  உணரும் நேரம்.
மனிதனுக்கு  இந்த தீர்ப்பு நாள்
நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.
அதனால் தான்
இறைத்தூதர்கள்
இருக்கும் வரை
உண்மையாக இரு என்றனர்.
மற்றவர்களுக்கு உதவியாக இரு என்றனர்.
நேர்மையாக இரு என்றனர்.
ஒற்றுமையாக இரு என்றனர்.
இறைவின் படைப்பில்
ஆற்றல் வலிமை,அழகு,அறிவு என
உள்ளவற்றிற்கு
மாறாக உள்ளவர்கள்   அதிகம்.
தனக்குள்ள ஆற்றல்
மனித அமைதிக்கு ,அன்பிற்கு,பயன் பட வேண்டும்.
ஆணவம் கூடாது.
வெறுப்பு ,பொறாமை கூடாது.
ஹிம்சை கூடாது.
அனைத்தும் கற்கிறோம்
தேர்விற்காக.
அதனால் தான்
வள்ளுவர்   திருக்குறளில்

"கற்க கசடற கற்க கற்றபின் நிற்க
அதற்குத் தக."
ஒழுக்கம் விழுப்பம் தரலால், ஒழுக்கம்
உயிரிலும் ஓம்பப்படும்.
அன்பில் அதனை வெயில் போல் காயுமே
என்பில் அதனை  அறம் .

குழந்தைப்  பருவத்தில் இருந்தே
தெய்வீக  நூல்களை  கற்பிக்கவேண்டும்.

செவ்வாய், அக்டோபர் 09, 2012

செய்யுங்கள் பிரார்த்தனை.எது எதற்கோ பிரார்த்தனை,வேள்வி நடத்தும் மக்கள், இதற்கு ஒரு வேள்வி நடத்தவில்லையா?

இறைவன்  ஒருவன் இருக்கிறானா,
தினம் ஒரு செய்தி,
அமைச்சர்கள் செய்யும் ஊழல்,
அமைச்சரின் தொந்தரவால்,
விமானப்பணிப்பெண் 
தற்கொலை.
மந்திரி மகள் ஊழல்.
மருமகள் ஊழல்.
மகன் ஊழல்.
தோழி ஊழல்.
இந்தியா ஒரு ஆன்மீக நாடு.
ஆனால் 
கோயில்,மடாலயங்கள்,ஆஸ்ர மங்கள் 
அனைத்திலும் ஊழல்.
பள்ளியில் ஊழல்.
கல்லூரியில் ஊழல்.
ஐ.ஐ.டி .யில் படித்து  பட்டம்பெறுவான் /வாள் 
என்ற   ஆசையுடன் காத்திருக்கும் 
பெற்றோர்களுக்கு 
அவர்கள் தற்கொலை செய்தி.
கூலி ப்படைவைத்து கொலைகள்.
குழுசேர்ந்து கற்பழிப்பு 
கருப்புப்பணம் .
கடத்தல்.
காவல் அதிகாரிகள்  கையூட்டு வாங்கி 
காலில் விழும் வீடியோ  காட்சிகள்.
ஒரு வாலிபனிடம் பைக் திருட கட்டாயப்படுத்தும் 
வீடியோ காட்சிகள்,
இரக்கமில்லாமல் அடிக்கும் காட்சிகள்.
இறைவன் உள்ளானா ?
மக்கள் பொறுமை உடன் உள்ளனரா?
எது எதற்கோ பிரார்த்தனை,வேள்வி நடத்தும் மக்கள்,
இதற்கு ஒரு வேள்வி நடத்தவில்லையா?
இல்லை என்றால்,
இனிமேல் இதற்காக வேள்வி நடத்துங்கள்.
நாட்டுப்பற்றுள்ளவர்களே !!
நாடு முன்னேற ஊழல்கள் ஒழியவேண்டும்.
மழைக்குப்  பிரார்த்தனை.
சினிமா  நடிகர்கள்  பிழைக்க பிரார்த்தனை.
இப்பொழுது  நாடு அராஜகம்  நோக்கி செல்கிறது.
நாட்டிற்காக   உயிர்த் தியாகம் செய்தோர்   பலர்.
அவர்கள் தியாகத்தில்  சுதந்திரம்
என்ற மாளிகை  கட்டப்பட்டுள்ளது.
இன்று அதிகாரத்திலுள்ளவர்கள்
பதவிக்காக  நாட்டை  வெளிநாட்டினர்
லாபத்துக்காக  பயன்படுத்துகின்றனர்.
தங்கள்    லாபத்துக்காக.
நம் நாட்டுத் திறமைகள்.
கலைஞர்கள்
அழிந்து வருகின்றனர்.
நம் நாட்டு  கலைப்பொருட்கள்
வெளிநாட்டில்   மதிக்கப்படுகின்றன.
இனிமேல்  பலசரக்கு நிர்வாகம் கூட
 அன்னியர்கள்  கையில்.
நாட்டார் கடை என்று ஓடும் நாம்
வால்   பிடித்து  வால்  மார்ட் ஓடும்
. நிலைக்கு வருவோம்.

போதும்;போதும்;



இவ்வளவு ஊழல் ஒழிய 
நடத்துங்கள் 
பிரார்த்தனை.
வேள்வி.
ஊழல்கள்   ஒழிந்து  ஊழல்வாதிகள் தண்டனை பெற்றால் 
உள்ளான் இறைவன்.
செய்யுங்கள்  பிரார்த்தனை.
வரும் தேர்தலில் நேர்மை ஆளர்கள் 
ஆட்சிக்கு வரட்டும்.
பிறப்பு இறப்பு உறுதி.
ஆறிலும் சாவு.நூறிலும் சாவு.
செய்யுங்கள் பிரார்த்தனை.
இறைவன் உள்ளான் என்பதை 
ஆஸ் தீகர்களே !!!
நிரூபியுங்கள்.







யார் குற்றம் ?

யார் குற்றம் ?

வழியில் செல்லும்போது.
தள்ளுவண்டி வியாபாரியிடம் ,
இரண்டு டசன்  வாழைப்பழம்
எடுத்துச்சென்ற போக்குவர த்துக்காவலர்.
 வியாபாரியிடம் கேட்டேன் .பதில்
ஐயா,
நான் என்ன   செய்ய ?
இங்கு நின்று  வியாபாரம் செய்ய,
அங்கு போக்குவரத்து அதிகம்.
என் பொழப்பு அப்படி.
அன்று வரும் வாடிக்கையாளர் ஏமாந்தால்
விலை அதிகம்.
 இது  யார் குற்றம்?

கனரக்வாஹனம்.
தடுத்து நிறுத்தியதும்,
காவலருக்கு  ஓட்டுனர் காணிக்கை.
பலர் முன்னிலையில்.
உடனே இது தவறு என்பது போய்
எனக்கு காவலர் வேலை கிடைக்கவில்லையே?
என்று வருத்தப்படுவோர் அதிகம்.

போக்குவரத்து அலுவலகம்,
மின்வாரியம்.
மாநகராட்சி அலுவலகம்,
பத்திரப்பதிவு அலுவலகம்
என எங்குமே லஞ்சம் .
நாடறிந்த உண்மை.
அனைவருக்கும் மகிழ்ச்சி
அலையவைக்காமல்
காரியம் நடக்கிறதே
பல முறை ஆட்டோ சிலவு மிச்சமாகிறதே.
இது எல்லாம் யார் குற்றம்?
67 ஆண்டுகள்  விடுதலை அடைந்து
அனைத்து  அலுவலகங்களிலும்
மக்கள் மனம் விரும்புவது
கொடுத்தால் காரியம் ஆனால்
சரி.
அதனால்  இது அங்கீகரிக்கப்பட்ட
குற்ற நியாயங்கள்.
இந்நிலைதீருமா?
எப்படியோ காரியம் ஆனால் சரி என்று
மக்கள் கருதும் போது .
இது பொதுவான குற்றம் .
ஆகையால் நியாயம் தானே?





திங்கள், அக்டோபர் 08, 2012

ராமர். ராமர் குடி கொண்டு அருள் புரிவார்.


ராமர்.
ராமரைத் தேடினேன்.
செங்கலால் கட்டப்பட்ட 
ஆடம்பரக் கோயில்களில் 
அவரின் பதுமைகளை 
மட்டும் கண்டேன்.
எளிய மக்களின் இதயங்களில் 
ராமரின் உயிர் துடிப்பைக்கண்டேன்.

அவர்  14 ஆண்டுகள் ஆட்சி  செய்தது 
ஒரு குடில்.
இன்றைய அரசியல் வாதிகள் போல் 
இசட்  பாதுகாப்பு இல்லை.
மக்களுக்கு பயந்து 
மக்களுள் மக்களாக 
கலந்து கொள்ளும் 
மக்களாட்சி தலைவர்கள் இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் சந்திக்கும் 
தலைவர்கள்.
அவர்களிடம் ஏமாந்தாலும் 
அவர்களுக்கே ஓட்டுப்போடும் 
ஏழை நடுத்தர மக்கள்.
40% தான் ஒட்டுப்போடுவதில்லையே?!!
ராமரின் உயிரும் ,ஆத்மாவும் 
உள்ள இடங்கள்:
அடிபட்ட ஜடாயு.
அங்கதன்.
ஹனுமான்.
குஹன்.
அனுசுயா.
சீதா .
கௌசல்யா.
அஹில்யா.சபரி.
ஏழையின் பக்தியில் இறைவன்
 இருப்பதால் தான் 
ஏழைக்கு நிம்மதியான தூக்கம்.
களங்கமில்லா  சிரிப்பு.
இறக்கம்.
பரோபகாரம்.
சுற்றங்கள். நட்பு.
பணக்காரர்கள் 
ஏழையின் உதவியும் 
இல்லாமல் 
வாழ முடியுமா?
ஏழையின் தயவால் வாழும் 
பணக்காரர்கள் 
ஆட்சியைப்பிடித்து, 
ஏழைகளை ஏழையாகவே 
சாலை வசதியின்றி 
மின்வசதியின்றி
குடிநீர் வசதியின்றி 
நிம்மதியாக தூங்குகின்றனர்.


பணக்காரர்களால் 
கோடிகோடி கறுப்புப் பண அரசியல் 
வாதிகளால் 
தூங்க  முடியுமா?
ஏழைகள் இறைவனின் ஆசி பெற்றவர்கள்.
மழலைச்செல்வம் பெற்றவர்கள்.
மன நிறைவு பெற்றவர்கள்.
ஆகையால் தான் 
தரித்ர நாராயன் சேவையில் 
நாராயண னைக் காணலாம்.
ஏழையின் சிரிப்பில்
 இறைவனைக் 
 காணலாம் 
என்றனர்.
இந்த கேடி அரசியல்வாதிகளால் 
நித்யாநந்தர்களும்,ப்றேமானந்தர்களும் 
பணக்காரர்களால் ஆஷ்ராமங்களும் 
அங்கு போதைப் பணக்காரகளின் 
போலியான ஆனந்தமும் 
கூடுகின்றன.
அந்த ஆஷ்ராமங்களில்
 சேரும் பணம்'கொடுக்கும் பணங்களை
 சாலைவசதிகளும்,
கோயில் தெப்பங்குள ங்களில் 
மழைநீர் சேகரிக்கும் குழாய்களும் அமைக்க
கொடுத்தால் 
ஆண்டவனின் கோடி ஆசிகளும் 
நிம்மதியும் 
கிடைக்கும்.
பகட்டு பக்தியை விட்டு 
உண்மை பக்தர்களின் 
மனதில் தான் 
ராமர் குடி கொண்டு அருள் புரிவார்.



சனி, அக்டோபர் 06, 2012

கீழ்க்கண்ட செய்திகள் வராத நாள் கிடையாது.

கீழ்க்கண்ட செய்திகள்  வராத நாள் கிடையாது.

காதலிக்க மறுத்த  பெண் மீது ஆசிட்  வீச்சு,
ஆசிரியர் திட்டியதால் தற்கொலை,
காதலனைக் கொன்று  காதலியும்.
காதலியையைக்கொன்று  காதலனும்
தற்கொலை.
 சமுதாயம்   இந்த மாதிரியான  சூழ்நிலைக்கு காரணம் என்ன?
தற்கொலை செய்வதில் எந்தமாநிலம் முதன்மை என்று கணக்கெடுத்து
தமிழ்  மாநிலத்திற்கு இரண்டாவது இடம்.

நமது கல்விமுறையில் நீதி போதனை வகுப்புகள்  குறைந்துவிட்டது.
நீதிபோதனை  நேரத்தில் கணிதம் /அறிவியல் பாடங்கள்.

மதசார்பற்ற  நாடு என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்.
அப்படியாவது தமிழ்  வளர்ந்ததா? வாழ்த்தோடு மட்டும் சரி.
அண்ணா  வாழ்க என்று ஊழல் புரியும்  தலைவர்கள் போல.
ஆங்கிலம் கலந்த திரைப்பாடல், வசனம்.திரைப்படப் பெயர் மட்டும் தமிழ்.
வரி விலக்கு.
மனத்தில்  நல்ல எண்ணங்கள் வளர இறைவழிபாடு அவசியம்.
அதற்குத் தடை.(பெரும்பான்மை கல்வி நிறுவனங்களில் மட்டும்)

மனக்கட்டுப்பாடு ,இந்திரியக்கட்டுப்பாடு,பிரம்மச்சரியம் என்பதெல்லாம்
கூறும்  தமிழ் மருத்துவம்  மறுக்கப்பட்டு, காதல் உணர்வு தேநீர் அருந்துவதுபோல் தீர்க்கப்பட வேண்டியது என்ற ஆங்கில வைத்தியம்
விவாகரத்துக்கள்,நிம்மதியில்லா  குடும்ப வாழ்க்கை,கள்ளக்காதல்,
என்ற அமைதியற்ற சூழல் உருவாக்கி உள்ளது.

இதற்கு அரசாங்கம்  மாணவர்களுக்கான ஆலோசனை,கலந்தாய்வு ,நீதி போதனை,புலனடக்கம் என்பது போன்ற கல்வி திட்டம்   ஏற்படுத்தவேண்டும்.
 திரைப்படங்களில் காதலுக்கான வன்முறை மாற்றும் நிலை ஏற்படவேண்டும்.
காதல் என்பது  கண்ணியமாக கட்டுப்பாடு நிறைந்ததாக இருக்கவேண்டும்.
திரைப்படங்கள்  காதலை மையப்படுத்திகட்டாயக் காதல்,பெற்றோரை மதிக்காத காதல்,ஓடிப்போகும் காதல், காதல் வந்தால் எதையும் பொருட்படுத்தக்கூடாது என்றெல்லாம் அடிக்கடி காட்டுவதால் இளசுகள் காதலுக்கு முதலிடம் தரும்.காதைக்கவில்லை என்றால் கொலை வரை செல் கின்றனர்.  பொரிக்கிகளால்  கட்டாயக்காதல் ஏற்படுத்தும் கதைகள்.சமுதாய நல சிந்தனை உள்ளவர்கள்  இவ்வாருபடம் எடுக்க மாட்டார்கள்.அவர்கள் வீட்டில் இவ்வாறு கடத்திமிரட்டி காதல் பண்ண முடியுமா?
காதல் தான் இளைஞர்கள் வீரம் என்பதுசமுதாயக் கேடு.
சூழல் ஏற்பட்டு ,இளம்வயதில் பெற்றோர்களை தவிக்க வைக்கும்  முடிவை எடுக்கின்றனர்.
மன இயல் வல்லுனர்கள் ஆராய்ந்து இளம் சமுதாயத்தினரின் மேல் அக்கறை காட்ட வேண்டும்.
நல்ல காட்சிகள் கண்டால் நல்ல எண்ணங்கள்  தோன்றும்.