வியாழன், நவம்பர் 30, 2017

கலியுகமா? அனைத்துயுகங்களிலும் பணமே

கோடிக்கணக்கில் பணம் 
தேர்தல் நேரம் அங்கு இல்லை வருமானவரி கடுபிடி,
சாலை போட்டு இரு மா தங்களில் பல்லாங்குழி 
அதை கேட்க ஆளில்லை.
பொதுமக்களுக்கும் பிடித்தே விட்டஊழல்
ஏரிகள் , விவசாய நிலங்கள் எப்படிப்போனால் என்ன,
சாக்காடு இருந்தும் இந்த ஊழல் நோக்காடு
தொற்று நோய் ஒழிக்க மருந்து இல்லை.
அம்மாவிற்கு மகள் உண்டா இல்லையா
குற்றவாளியா இல்லையா
அம்மாவின் ஆட்சி தொடர
அம்மாவின் கட்சிக்கே ஒட்டு.
தின ஆனந்தத்திற்கு கூட்டம்
குந்தியல்லவா தர்மருக்கு அம்மா ?
அது ஒரு யுகம் ;இது கலியுகம்.
பணம் பணம் பணம்
நற்குணங்கள் மாற்றும் பணம்
நன்றி மறக்கவைக்கும் பணம்
வெற்றுத்தாளில் மதிப்பெண்
போட வைக்கும் பணம் .
பொய்யை மெய்யாக்கி வாதாட வைக்கும் பணம்.
இருக்கும் கோப்பை மறைத்து
இல்லாத கோப்பை உருவாக்கும் பணம்.
மெய் சாட்சியைக் கொல்லும் பணம்,
பணம் பணம் சேர்த்தால் வருமானவரி
கட்டவேண்டியதில்லை.
பினாமி பெயரில் எழுதிவைக்கும்
சட்டம் .ஒரே கட்டடம் ஒரே தொழில்
ரசீது புத்தகம் பலபேரில்
ஆஹா ! பணம் .
ஒருமாணவன் பொறியியல் கட்டணம்
இரு பது பேராசிரியருக்கு ஓராண்டு ஊதியம்.
ஆஹா! அந்த கல்லூரிகளின் பின்னணி
அனைத்துக் கட்சிக்கும் கூட்டணி
அனைத்துக் கட்சித் தலைவருக்கும் கல்லூரி
அனைத்து ஆஷ்ராமங்களுக்கும் கல்லூரி
தெய்வ பயம் , அதிகாரபயம்
அனைத்தும் உறவாக்கும் ஊழல் பணம்.
ஊழல் பணமின்றி மருத்துவக் கல்லூரி
பணம் ! பணம்! பணம்! பணம் !
சத்தியம் தோற்கும்! அசத்தியம் வெல்லும் !
படித்த அறிவாளி பணக்காரன் ஆக
போய்கணக்கு , பொய் சாட்சி ,பொய் நீதி
தப்புக்ககனக்கு போடும் மனிதன் ,
தர்ம தேவன் நீதிக்ககனக்கு
மூப்பு மரணம் நோய் விபத்து அகாலமரணம் .
ஆத்மவேதனை அனைத்தும் தீமைகள்
வளர்க்கு குடிகாரப் பணம்.

கருத்துகள் இல்லை: