கற்றது அறிந்தது கேட்டது,கேட்டுத் தெளிந்தது
கற்பனையில் உதித்தது என்றே
காலத்தால் வளரும் மாற்றங்கள்
கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தேன்.
முன் வந்த வரலாறு ,கதைகள் ,
பின் வந்து குவியும் விடைகள்.
மாறாத விடைகள்,
பூமாதாவின் அனாதைக் குழந்தை சீதா,
வளர்ப்புமகள் ,
அங்கோ யாகத்தில் தோன்றிய ராமன் .
ஆற்றில் மிதந்து வந்த கர்ணன்,
அறிவிருந்தும் வறுமையில்
பிறப்பால் ஒதுக்கப்பட்ட விதுரன்,
காட்டிக் கொடுத்த விபீஷணன் ,
இளம் மனைவி கைகேயி ,
இடையில் புகுந்த கூனி,
நடையில் வந்த சகுனி
பார்வையால் பிறந்த குழந்தை ,
பார்வையற்றவனுக்குப் பிறந்த குழந்தைகள்,
அனைத்தும் பார்த்தால் இன்றும் அதே காட்சிகள்.
இன்றும் செல்வியா ?குமரியா ?செல்வக் குமரியா?
தங்கக் காரிகையா,முலாம் பூசிய தங்கமா?
நீதிமான்றத்தில் இழுத்தடிப்பு,
இங்கும் ஒரு வளர்ப்பு மகன்,
அடுத்தோ கடுத்தோ
மூன்று தாரங்கள் ,
மாமன்கள் மச்சான் கள்
குடும்பச்சண்டைகள்,
ஒருவரை ஒருவர் ஒழிக்கும்
சபதங்கள்.
பாராளுமன்றத்தேர்தல்
பாவிகள் குடும்ப்பச் சண்டை
௨ஜி ,௩ ஜி, என
பிடித்த சனிகள்,
தொட்டில் குழந்தைகள்,
கள்ளக் காதல்கள்,
இதில் வரலாற்றுக்குறிப்புகள்
மாற்றான் மனைவியை கட்டிய மன்னர்கள்
கட்டிய புரட்சித்தலை வர்கள்.
இப்படியே பார்த்து வகுத்து தொகுத்துப் பார்த்தால்
இது முன்னே போன வெள்ளத்தில்
பின்தொடர்ச்சி.
கற்பனையில் உதித்தது என்றே
காலத்தால் வளரும் மாற்றங்கள்
கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தேன்.
முன் வந்த வரலாறு ,கதைகள் ,
பின் வந்து குவியும் விடைகள்.
மாறாத விடைகள்,
பூமாதாவின் அனாதைக் குழந்தை சீதா,
வளர்ப்புமகள் ,
அங்கோ யாகத்தில் தோன்றிய ராமன் .
ஆற்றில் மிதந்து வந்த கர்ணன்,
அறிவிருந்தும் வறுமையில்
பிறப்பால் ஒதுக்கப்பட்ட விதுரன்,
காட்டிக் கொடுத்த விபீஷணன் ,
இளம் மனைவி கைகேயி ,
இடையில் புகுந்த கூனி,
நடையில் வந்த சகுனி
பார்வையால் பிறந்த குழந்தை ,
பார்வையற்றவனுக்குப் பிறந்த குழந்தைகள்,
அனைத்தும் பார்த்தால் இன்றும் அதே காட்சிகள்.
இன்றும் செல்வியா ?குமரியா ?செல்வக் குமரியா?
தங்கக் காரிகையா,முலாம் பூசிய தங்கமா?
நீதிமான்றத்தில் இழுத்தடிப்பு,
இங்கும் ஒரு வளர்ப்பு மகன்,
அடுத்தோ கடுத்தோ
மூன்று தாரங்கள் ,
மாமன்கள் மச்சான் கள்
குடும்பச்சண்டைகள்,
ஒருவரை ஒருவர் ஒழிக்கும்
சபதங்கள்.
பாராளுமன்றத்தேர்தல்
பாவிகள் குடும்ப்பச் சண்டை
௨ஜி ,௩ ஜி, என
பிடித்த சனிகள்,
தொட்டில் குழந்தைகள்,
கள்ளக் காதல்கள்,
இதில் வரலாற்றுக்குறிப்புகள்
மாற்றான் மனைவியை கட்டிய மன்னர்கள்
கட்டிய புரட்சித்தலை வர்கள்.
இப்படியே பார்த்து வகுத்து தொகுத்துப் பார்த்தால்
இது முன்னே போன வெள்ளத்தில்
பின்தொடர்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக