வெள்ளி, நவம்பர் 07, 2014

ஹிந்தி பேச -பாடம் -5 வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு,

ஹிந்தி என்பது எளிய மொழி 

இதில் தமிழ் மொழியில்  கலந்து 
பல ஆயிர வருடங்களாக ஒன்றி இணைந்து 
புணர்ந்து  வடமொழியா தமிழா என்று 

ஐயமுறும் சொற்கள் உள்ளன.

முகம் என்றசொல் தமிழா?வடமொழியா?


சந்தேகம்,நிச்சயம்,அவசியம்,சொப்பனம்,அதிகம் ,
கம்மி  ,சந்தோசம் ,சாட்சி,பரிவர்த்தனை 
பூமி,அக்கினி,வாயு ,புத்திரன் ,மித்திரன் ,பந்துக்கள் ,
இஷ்டம் ,இச்சை,அவமானம் ,மானம் ,மரியாதை,
லக்ஷியம்,சமாசாரம்,நிர்வாணம்,நிர்வாகம் 

இந்த  ஒற்றுமையின் இணைப்பின் புணர்ச்சியினை 

நன்கு,உணர்ந்து ,தெளிந்து ,புரிந்து ,

நமது தேசத்தந்தை  

ஹிந்தியை நாட்டின் பொதுவான 


இணைப்பு,தொடர்புமொழி ஆக்கினார்.

ஆனால் ஹிந்தி எதிர்ப்பு என்று 

உதயசூரியன் என்றவடமொழி பெயர்கொண்ட 
கட்சி  தமிழ் தமிழ் என ஆட்சி பிடித்து 
இளைஞர்களை  ஹிந்தி படிக்க தடுத்து

தன் வாரிசுகளுக்கு ஹிந்தி தெரியும் என்று மத்திய அரசு அமைச்சராக தகுதி என்று 
ஹிந்தியில் சுவரொட்டி அடித்து வாக்கு கேட்கிறது.

தமிழக மக்களே !சிந்திப்பீர்!
இன்று ஆங்கிலவழி என்ற நிலை.
இந்திய மொழிகளுக்கு இழி நிலை.

இந்திய மொழிகள் வளர்ப்போம்.
பலமொழி  அறிவு பாரினில் உயர்த்தும்.

வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு, 



கருத்துகள் இல்லை: