தாயகம் தாய் மொழி புறத்தே தள்ளி.
கடல் தாண்டி வணிகம் செய்ததால்
காரைக்குடியில் அழகு கட்டிடங்கள்;
கண்ணீர்மல்கி நெஞ்சுருக்கும்
கதிகாமம்,சிங்கப்பூர் தமிழ்த் தெய்வக் கோயில்கள்.
பசிவந்திடப் பறந்துபோம்;
புலவர்களை வாழவைத்த சங்ககாலாம்,
அரசாட்சி நடந்த காலம்.
தமிழின் பெயரால் ஆட்சிபீடம் ஏறியவர்களின்
திறந்த பள்ளிகள் எல்லாம் ஆங்கிலப்பள்ளி.
தெரிந்தும் தெரியாமலும் திறந்த பள்ளிகள்.
பணமே குறிக்கோள் என ஆட்சியர்கள்
ஆங்கிலம் வளர்த்து,தமிழால்
பொருட்செல்வம் இல்லை ஐயா.
பசிவந்திட பற்றும் பறந்து போகும்.
கணிமொழியில் என்னை அம்மா என்று
அழைத்தல் போதும்.அவள் ஆங்கிலம் மட்டுமே படிக்கிறாள்
என்ற துணைவியின் மகள் வாக்கு.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
தமிழ் பட்டதாரிகள்,தமிழ் வழி பட்டதாரிகள்,
தாயகம் குளிர சம்பாதிக்கவில்லை.
ரைஸ் என்றாலே வாணிகம்.
அரிசி என்றால் departmental ஸ்டாரே.
இந்நிலை ஒழிய என்ன செய்வோம்.
சன் டி .வி. பரிதியாக மாறுமா?
பாரதி சொன்ன வாக்கு தமிழ் இனி மெல்ல சாகும்.
அரசுப்பள்ளியிலும் ஆங்கில வழி .
இதே ஆஸ்தி தரும்.
ஆஸ்தி தர எல்லாம் அழிவு தானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக