வியாழன், ஜூலை 25, 2013

கொஞ்சம் கூட பலி-பாவத்திற்கு அஞ்சாத கலி யுகம் இது தானா?

பிராயச்சித்தம்

ஹிந்திக்  கதைச்  சுருக்கம்.

 திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு வந்த மருமகளுக்கு   அந்த வீட்டில் உள்ள பூனையால் பெரும் தலைவலி. பால் ,தயிர் வைத்துவிட்டு வந்தால் பூனை குடித்துவிடும்.எவ்வளவு தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும்  சற்றே அசந்துவிட்டால் அன்று முழுவதும் தலைவலிதான். என்ன செய்வது.

பொறுமை இழந்த அந்த 13 வயதுள்ள மருமகள் ஒரு நாள் பலகை எடுத்து வீசியதும் பூனை மல்லாந்து விழுந்து விட்டது. பூனையைக் கொன்றபாவம் பூலோகத்தில் தீராது.மிகவும் பதறினார் மாமியார்வீட்டார்.

 ஒரு பெரும் கூட்டமே சேர்ந்து பலவித பரிகார யோசனைகள்.இறுதியாக அந்த நகரத்தின் பரிகார பண்டிதர்  பரமசுகத்தை அழைத்துவர முடிவு செய்தனர்.

பண்டிதர் பரமசுகத்தின் உயரம் 4 1/2 அடி. தொந்தி 42 " .ஐவர் சாப்பாட்டை அவரே சாப்பிடுவாராம்.

பண்டிதர் வந்ததும் அவர் பார்வை வீடுமுழுவதும் சென்று வந்தது. முகத்தில் அகத்தில் மிக்க மகிழ்ச்சி.
நல்ல பசைஉல்ல இடம். இருமாதத்திற்கு கவலை இல்லை. நல்ல வருமானம் என்ற நிம்மதி.

அனைவரும் கவலையுடன் பூனை இறந்ததைகூறினர். அவர் ஒரு பழைய பரிகார புத்தகத்தை  கையில் எடுத்து புரட்டினார்.கட்டைவிரல் ஒவ்வொருவிரலிலும் இருந்த ரேகையை தொட்டுவந்தது.

பின்னர் பரிகார பூஜைப் பொருள்கள் சொல்ல ஆரம் பித்தார்.

இந்தப் பூனையின் கொலை மிகப் பெரிய பாவச்செயல்.இதற்கு கும்பிபாக்கநரகம் தான்   கிடைக்கும்.ஆனால் இந்த பரிகார பூஜை சிரத்தையுடன் செய்தால் பாவ விமோசனம் கிட்டும் என்றார்.

மிக சிரத்தையுடன் வீட்டுப்பெண்கள் அவரை வணங்கி பூஜைப் பொருள் பட்டியல் எழுத ஆரம்பித்தனர்.

10 கிலோ அரிசி/ கோதுமை.நவதானியங்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ,நெய் 4 கிலோ,தங்கத்தால் செய்த பூனை தங்கள் சக்திக்கு ஏற்றவாறு குறைந்ததளவு 4 கிராம். பட்டியல் எழுத எழுத வீட்டில் உள்ளோர் தலை சுற்றியது. பண்டிதர் பரமசுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு இரண்டுமாதம் வேறு பரிகார நிவர்த்திக்கு ஆள் வரவில்லை என்றாலும் குடும்பத்தை சமாளிக்கலாம்.
இறுதியாக தக்ஷிணை ரூபாய் 500/.
கூடி இருந்தவர்கள் ,இதென்ன சிறிய பாவமா/மிகப்பெரிய பாவம் செய்ய வேண்டியது தான் என்று கோரஸ் பாட,பண்டிதர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட ,திடீர் என்று பூனை அசைய பண்டிதர் முகம் வாட,அது எழுந்து ஓடிற்று.

  அந்தக்காலத்தில் ஒரு பூனை அடித்ததற்கே இவ்வளவு வேதனைப் பட்டுள்ளனர்.

இன்று பல அரசியல் கொலைகள்;கற்பழிப்புகள்;சத்துணவு விஷம் பிகாரில் அதுவும் அரசியல் சதி.

கொஞ்சம் கூட பலி-பாவத்திற்கு அஞ்சாத கலி யுகம் இது தானா?

கருத்துகள் இல்லை: