சனி, ஏப்ரல் 28, 2012

society is mislead by puranas

கடவுள்  என்ற ஆன்மிகம் பேசினால் நூறு சதவிகிதம்

நல்லொழுக்கம்,நேர்மை,சத்தியம்,ஆசை இன்மை  போன்றவற்றை

 பின்பற்ற வழிகாட்டகாட்டவேண்டும்.

நேற்று நான் ஊட்டியில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு ௨௦-௨௧ வயதுள்ள ஒரு ஆண்-பெண் ஜோடி பேருந்தில் ஏறியது.
ஏறும்போது அவர்கள் காதல் ஜோடி என்று தெரிந்து கொண்டேன்.

காதல் என்ற  விஷயம் தேவையா அல்லது தேவை அற்றதா என்பது

வேறு.அனால் அந்த ஜோடியிடம் விசாரித்த போது அவன் ஒரு வெல்டிங்

கம்பெனி பணியால்.அவளோ இரண்டாம் ஆண்டு பட்டம் படிக்கும் மாணவி.

படிப்பை விட்டு விட்டு வந்துவிட்டால் .அவளைவிட அவன்தான்

பதற்றத்துடனும் ,கவலை உடனும் காணப்பட்டான்

இருவரின் முன் வினா.அடுத்த நேரம் எங்கு தங்குவது,தொழில் என்ன செய்வது?
வீட்டிற்கு சென்றால் நிலை என்ன.?

         இதற்கு அவர்கள் முன் உதாரணம் சிவபெருமான்.தக்ஷன் தாகஷாயினி.

முருகன் வள்ளிதெய்வானை.தசரதர் மூன்று மனைவிகள்.இன்னும் சில 

தெய்வீகக் கதைகள்.
           அவர்கள் தன் நிலை உணர்ந்தால் அவர்கள் அழமான சிந்தனையால் 

தத்துவம் அறிவர் என்பது ஆத்திகவாதம்.இவர்களுக்கு மேலோட்டமான கதைகளைத்தான் சொல்கிறோம்.
திரைப்படங்கள் இதை மிகை படுத்துகின்றன.
நள-தமயந்தி,துஷ்யந்தன்-சகுந்தலா,காதல் இல்ல காவியங்கள் இல்லை. 

புராணங்கள் இல்லை என்பது வாதம்.

க்ரிஷ்ணனைத்தான் அதிக பெண்கள் விரும்புகின்றனர்.

பெண்பார்க்கும் படலத்தில்  அதிகமாகப் பாடும் பாட்டு அலைபாயுதே கண்ணா தான்.
ராமர் போன்ற இல்வாழ்க்கை ராவணின் புகுதலால் பாதிக்கப்படுகிறது.
இந்த கதைகள் தான் காதலுக்கு காரணமாக,எடுத்துக்காட்டாக 
அமையும் போது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.

இதில் குடும்பக் கட்டுப்பாட்டு வாசகம் வேறு- 

பரமனுக்கு இருவர், பாமரனுக்கு  ?


கருத்துகள் இல்லை: