சனி, மார்ச் 31, 2012

thulasiraamayanaththil rama mahimai dohai.tamil

துளசி ராமாயணம் ----ஈரடியில் ராமன் மகிமை.

ராமாவதாரம் என்பது  இறைவனே
  மனிதனாகப் பிறந்தால்
  இப்புவியில் இன்னல்கள்
அனுபவித்தே தீரவேண்டும்,
மக்களின் அவச்சொல்லிலிருந்து
  தப்புவதென்பது  இயலாத ஒன்று.
மூன்று அன்னைகளின் அன்பு,
தந்தையின் பாசம்,
சகோதரப்பற்று
,மக்களின் நேசம்,
அனைத்தும் இருந்தாலும்
   தந்தையின் வாக்கை   காப்பாற்ற 
 கானகம் செல்லுதல்
,மனைவியை இழத்தல்,தேடுதல்,
வாலியை மனித அவதாரத் தத்துவப்படி
 மறைந்து கொல்லுதல்,
ராவணனின்   தம்பி விபீஷணனின்
 கருத்துருபெற்று
 பல ரஹசியங்களை
அறிந்து வென்ற காதை.
வால்மிகியின் மூலம்
 அறியாத மக்களுக்கு
 மக்கள் மொழியில் வந்து
 இல்லம்தோறும் பூஜிக்கப்படும்
துளசிதாசரின் ராம சரித்மானஸ்.
அதில் ராம நாம மகிமை கூறும் தோஹை .படியுங்கள்.
பரமனின் புகழ் பாடுங்கள்.
அடியேன் பொருள்  கூறும்  முயற்சியில்

 குற்றம் குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
  1. ராமநாமம் என்பது
  2.  ஒரு ஒளிவிளக்கு
  3. .ராமநாமத்தை உச்சரிக்க ரா என்ற நெடில் எழுத்தால் பாபங்கள் வெளியேறும்
  4. .-ம்-என்ற எழுத்தால் உதடுகள் மூடப்படும் பொழுது 
  5.  மீண்டும் பாப எண்ணங்கள்
  6. அகத்தில் எழாது.
  7. புண்ணியமே சேரும்.
  8. ராம நாமத்தை    ஜபித்தால்
  9.   நான்கு  புறமும் ஒளிமயமாகும்
  10.  .நம் உள்ளும்  புறமும்  தூய்மை அடைவோம்.
  11. ராமன் நேரடியாக
  12.  சபரி,ஜடாயு முதலிய
  13. உத்தமமானவர்களுக்கு முக்தி அளித்தார்
  14. .ஆனால் ராம நாமம் ஜபித்தால்
  15.  துஷ்டர்களும் மோக்ஷம் அடைவர்.
  16. ராம நாமத்தின் மகிமையின் கதை வேதங்களிலும் புகழப்பட்டுள்ளது.
  17. கலியுகத்தில் ராமநாமம் என்பது மனம் விரும்புவதெல்லாம் தரும்  கல்பவிருக்ஷம்.நலம் தரும்,முக்தி தரும் .துளசிதாசராகிய மிகவும் இழிவான என்னை  புனிதனாக்கியது ராம நாமமே.
  18. ராமநாமம் ஸ்ரீ நரசிம்மன்.கலியுகம் ஹிரண்ய கஷ்யபு.ராம நாமம் பிரகலாதன்
    .இந்த ராமநாமம் கலியுகம் என்ற அரக்கனை  வதம்  செய்து ஜபிப்போரைக் காப்பாற்றும்.
துளசி ராமாயணத்தில் சிவ மகிமை-

சிவ பகவான் வரம் அளிப்பவர்.
அவரை சரணாகதி அடைந்தவரின் துன்பங்களைப் போக்குபவர்.கருணைக்கடல்.பக்தர்களை மகிழ்விப்பவர்.சிவனை ஆராதிக்காமல் கோடிக்கணக்கான யோகங்கள் ஜபங்கள் செய்தாலும்  விரும்பிய பலன்கள் கிட்டாது.


 .  

கருத்துகள் இல்லை: