வெள்ளி, நவம்பர் 25, 2011

man's relationship and mentalstatus

மனித  உறவுகளில் மன நிலை

மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்ததும் இரத்த பாசம் அவனை மிகவும் கட்டுப்பாட்டில்  வைத்திருந்தது.அவன் அறிவு  வளர்ச்சிஅவனின் தேவைகளைப் பெருகிக்கொண்டே   செல்கின்றன.அவனின் சிந்தனைகள் எண்ணங்கள்  செயல்கள்  மாற்றங்கள் அடைந்து கொண்டே வருகின்றன.அவனின் உயர்ந்த அறிவு  அவனை அன்பு,மனிதநேயம் ,சத்தியம் ,நேர்மை,கடமை, பற்று,பாசம் ,பரோபகாரம்  என்று மனித உலக ஒற்றுமைக்கு வழிவகுக்கின்றன.
ஆனால் அவன் தேவைகள்,தீய எண்ணங்கள்,சுயநலம்,போட்டி,பொறாமை .சகிப்புத்தன்மை இல்லாமை,பழிவாங்கும் எண்ணங்கள்,ஆணவம்,பேராசை,பெண்ணாசை  போன்றவை  தான்  மனிதத்தன்மை மிக்க உயர்ந்த எண்ணங்களுக்கு எதிராக செயல் படவைக்கின்றன.
அவைகளில் இருந்து விடுபட மனித நேயத்திற்கு
மகான்களும் இறைதூதர்களும்
 உலகில்  மனக் கொந்தளிப்பு அமைதியின்மை போக்க
மனிதர்களை அழிவுப்பாதையில்  இருந்து  ஆக்கமும் அன்பும் நிறைந்த வழிக்கு   கொணர்ந்து மனித மனங்களை இணைக்க  தோன்றியவர்களே

ஏசு,மும்மது நபி,லோககுரு  ஆதி சங்கரர்,மகாத்மா புத்தர்,

போன்றோர்.மக்கள் மனநிலை ஒரு நிலைப்பட  ஆன்மீகத்தைத் தவிர வேறு சன்மார்க்கம் இல்லை.

சர்வாதிகாரிகள்,போர்வீரர்கள்,கலகக்காரர்கள்.தன் நலத்திற்காக  உயிர் பலிக்கு காரணமானோர்  நிலைத்து நிற்கவில்லை.
ஆனால்  குரான் பைபிள்,வேதங்கள், உபநிஷத்துக்கள்  நிலைத்து வழி காட்டிக்கொண்டுள்ளன .
அவைகளை ஆழ்ந்து படிப்போர் மனித நேயத்தையும் மனித ஒற்றுமை
யை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் கருத்துக்களை  பரப்புகிறார்கள்
.
சிந்தனை யாளர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தீவீரவாதிகளின்  மிருக வெறிகள் ஒடுங்க நாம் ஆழ்நிலை தியானத்தில்

ஈடுபடவேண்டும்.கலியுகம் என்பது இறைவனை சரணாகதி  அடைந்தவர்களை  இறைவனே நேரடியாக ரட்சிக்கும்  காலம் கலியுகம்.

மனித மனம் தீவீர வாத  எண்ணங்களில் இருந்து விடுபட்டு அப்பாவி மக்களின்
உயிர்  காக்க  இறைவனைத்  தொழுவோம்.


மனிதர்களின் சுயநலம் ,கையூட்டு,அரசியல் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்,அரசு ஊழியர்கள்,கொள்ளை லாப நோக்கம் கொண்ட தொழில் அதிபர்கள், வணிகநோக்கில்  இளைஞர்கள் மனத்தை பாதிக்கும் திரைப்படத்தயாரிப்பார்கள்,கொள்ளை லாபத்தை  நோக்கமாகக் கொண்டு இயங்கும் பள்ளி நிறுவன நிர்வாகிகள்
 அனைவரின் மனமும் மாற தினமும் பிரார்த்தனை செய்வோம்.













   

கருத்துகள் இல்லை: