புதன், ஆகஸ்ட் 01, 2012

.வருமான விந்தை



வருமான விந்தை 
நம்  நாட்டில்  வளம்  என்பது  இல்லை  என்று சொல் முடியாது.நீர்வளம் உள்ளது.  மழை  பெய்கிறது. விளைச்சல் பெருகுகிறது.அரிசிப்பஞ்சம் இல்லை.

அரிசி கிடைக்கிறது. விலைதான் அதிகம்.பருப்பு கிடைக்கிறது .விலைதான் அதிகம்.காய்கறி கள்  கிடைக்கிறது.விலை தான்  அதிகம்.தங்கம் கிடைக்கிறது.
தங்க நகைக்  கடைகள்  நாளுக்கு நாள்  அதிகரிக்கிறது.

வேலை  கிடைக்கிறது. செய்ய ஆள் இல்லை.தமிழ் நாட்டிற்கு  பணி  புரிய  பலர்  வேறு மாநிலங்களில்  இருந்து  வருகின்றனர். காய்கறி   கடைகளில்
விற்பனையாள்  கூட வெளிமாநிலம் கட்டிடப் பணியாட்கள் வெளி மாநிலம்.
எனவே  வேலை இல்லாத்திண்டாட்டம்  கிடையாது.

     இச்சூழலில் தமிழ் நாட்டின் ஜீவாதார வருமானமே டாஸ்மார்க் தான் என்ற நிலை. காரணம் புரியவில்லை. ஒரு தீய பழக்கத்தால்  ஒரு வருமானம் வரும் என்று  ஒரு  அரசு  அதை வளப்படுத்தினால், அந்த அரசுக்கு  பொதுமக்கள் மேல் எவ்வளவு  அக்கறை.!!!
ஏழைகளுக்கு  இலவச அரிசி. மின்சாரம்.ஆனால் வருமானம் அவர்களை  குடிகாரர்களாக்கி  அவர்களிடம்  உள்ள தீய  பழக்கத்தால்  அவரிடமே சுரண்டி
அவர்களுக்கே  அரிசி. குடி குடியைக் கெடுக்கும் . உயிரைப்பறிக்கும்  என்ற சிறு
எழுத்து விளம்பரம்..குடிப்பழக்கத்துக்கு எதிரான அரசு விளம்பர  குறும் படங்கள்  விந்தைதானே.

அந்த குடிக்கு  அடிமை யாவது யார்.?அதைப்பற்றி கவலை இல்லை என்றால்

அது  குடி அரசா? குடியரசா ?

மும்பை போன்ற நகரங்களில் ஒருவகைத் தொழில். அதிக வருமானம்.

டாஸ்  மார்க் அதிக வருமானம்.

புகை உயிருக்குப் பகை.ஆனால் அதைத் தடை செய்தால் பலரின் வேலை வாய்ப்பு  பாதிக்கும்.

தீய பழக்கங்கள் வளராமல்  குடிகளைக்    காப்பது    தான்  அரசு.

காசு வருமானம்  என்றால்  தீயவை தான் பெருகும்

காசு-மது-மாது- மயக்கம் -மரணம் . விளம்பரத்தோடு  வருமானம் .விந்தைதான் 
















molikkolkai.மொழிக் கொள்கை

மொழிக் கொள்கை.

தீரன்  மெட்ரிக் பள்ளி மற்றும்  ஈரோடு பள்ளிகளில்  ஹிந்தி,பிரெஞ்சு  போன்ற மொழிகள் கட்டாயமாக 
திணிக்கப்படுகின்றன என்ற செய்தி  தமிழ் மணம்  வெளி இட்டுள்ளது.

இந்த கட்டாயம் என்பது 1970 முதல் நடை முறையில் உள்ளது.

தமிழகத்தில்  தமிழைத் தாய் மொழி இல்லாதவர்களுக்கு குறிப்பாக தெலுங்கு,கன்னடம் பேசுவோருக்காகவும்  மற்றும் சென்னையில் அதிகமாக உள்ள மார்வாடிகள்,குஜராத். போன்ற வெளி மாநிலத்தவர்களுக்காக 
தமிழுக்கு  மாற்றாக  அவர்கள் தாய் மொழி பயில வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதற்காக இருமொழி திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தாய் மொழி பயில்பவர்கள் தமிழ் படிக்கவேண்டாம்  என்ற நிலையில்   அரசாணை  வெளியிடப்பட்டு  அமலாக்கப்பட்டது.

இது அரசுப்  பள்ளிகளிலும் , அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் நடை முறையில் இருந்துவருகிறது.ஆனால் மெட்ரிக் பள்ளியில்  இது வேறு கண்ணோட்டமாக மதிப்பெண்  பெறுவதற்கான  எளிய வழி என 
பின்பற்றப்  பட்டதால்  இன்று வெளிச்சத்திற்கு  வந்து  புதிதாகத் தெரிகிறது.

தமிழைத் தவிர மற்ற மொழிகளில் குறிப்பாக வடமொழி ,பிரஞ்சு  மொழிகளில் பாட நூலே மிகச் சிறிது தான்.அதில் ஆங்கிலத்தில் விடை அளித்தால் போதும்.

இம்மொழி  மதிப்பெண்கள் வேறு மாநிலத்தில் மதிப்பு பெற்றாலும் 

தமிழக கல்வித்துறைக்கு உண்மை நிலைதெரிவதால் 
.
  தமிழக அரசு மாநில முதல் வரும் மாணவன் தமிழ் எடுத்தால்  தான் 

மாநில முதல் மாணவன் என்று அறிவிக்கிறது.

இப்பொழுது  ஹிந்தியை விட தெலுங்கை விட அதிகம் படிப்பது பிரஞ்சு மொழிதான்.புதுவையில் அதிகம்.



.இந்த இருமொழி க்கொள்கையால்  பாதிக்கப்பட்டது தமிழ் தான்.




private schools in tamilnaadu and language policy.

கல்விக்கூடங்கள்  1970 க்குப்பின்  வணிக நோக்கில்  ஆரம்பிக்கப்பட்டு ,

அரசின் பல் துறைகள் போன்று வசதி படைத்தவர்கள் விரும்பும்
 தனியார் துறை  யாக மாற்றம் அடைந்தது  ஏன்?

இதில்  கல்வித்துறை  அமைச்சகம்,இயக்குனர்கள்,தலைமை ஆசிரியர்கள்,

ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்,அரசியல்வாதிகள் ,பத்திரிகைகள் ,அரசுப்பள்ளிகளில் படித்த  மாணவர்கள்  என  அனைவரின் ஒத்துழைப்பு
இல்லாமல்  தனியார் பள்ளிகள் வளர முடியுமா?

கல்வி இன்றியமையாத செல்வம்.    ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒளிமயமாக  கல்வி அவசியம்  என்ற நிலை ஏற்பட்டபின்

கல்வி நிலையங்களில் ஏற்றத்தாழ்வுகள்  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போல் மாறிவிட்டன.

காரணங்கள்:
1.தனியார் வழியிடும்  புத்தகங்கள் ,குறிப்பேடுகள்,கழுத்துப்பட்டை,காலனி,
சீருடை, பேருந்துவசதிகள், எழுது  பொருட்கள் ,விளயாட்டுப் பொருட்கள்,
பள்ளி விளையாட்டுத்திடல்  என அனைத்தும்  தனியார் பள்ளிகள்
கவர்ச்சிக்கு ஒரு மூல காரணம்.
2.ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் ,முதல்வர்களின் கடும் உழைப்பு.

3.கல்வி என்பதை  பெற்றோர்கள்  ஆங்கில வழிதான் என முடிவு எடுத்தாது.

4.தமிழ் வழி   ,இந்திய மொழி வழி  படிப்புகள்

வேலைவாய்ப்புத்தராததால்  ஆங்கிலம் தான் என்ற நிலை.

5.ஆங்கிலம் கலந்து தமிழ் மொழி பேசாவிட்டால் அவன் அறிவு வளர்ச்சி இல்லை என்று   அவமானப் ப்படுதல்.

6.தமிழ்  நாட்டில்  தமிழ் படிக்கவேண்டாம்.
.முதல் மொழி வடமொழி.பிரெஞ்சு எடுத்தால்
  ஒரு பாடம் சுலபமாகி றது .
 மதிப்பெண்களும் அதிகம் கிடைக்கும்.

அண்ணாதுரை  அவர்கள் மாண்புமிகு முதல் அமைச்சராக இருந்த போது

மும்மொழி திட்டம் கொண்டுவர முயன்றார்.

 அதில் தெலுங்கு மொழிக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு

 தோல்வி  அடைந்தது .

        தமிழகத்தில்  உள்ள 40%அதிகமாக உள்ள தெலுங்கர்கள் தங்கள் தாய்

மொழி படிக்கவேண்டும் என்ற  எண்ணமே இல்லாதவர்கள்
.தமிழை மிகவும் நேசிப்பவர்கள் .
 திரு வை.கோ.,விஜயகாந்த்,ஈவேரா .உட்பட
.மாண்புமிகு  முதல்வர்  அண்ணாத்துரை கொண்டுவந்த  திட்டத்தில்

 ஹிந்தி படிப்பதில்பெற்றோர்கள்  அதிகம் ஆர்வம் காட்டியதால் திட்டம்

கைவிடப்பட்டது.

பின்னர் பள்ளி நேரத்திற்கு ப பின் ஹிந்தி கற்பிக்கும் ஒரு திட்டம் வந்து  கைவிடப்பட்டது.

ஹிந்தியை விரும்பா அரசியலில், ஆங்கிலம் மகத்துவம் பெற்று தமிழை

விரும்பா மொழியாக்கியது என்பதுதான் உண்மை.

பொதுவாக மக்கள் விரும்புவது தனியார் துறை தான்.
பணம் சிலவானாலும் நிம்மதி.
அரசுப்பள்ளிகளில்  தனியார் பள்ளி போன்று பொறுப்பு ஏற்பது கிடையாது.
ஐந்து ஆண்டுகள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் கவனிக்காமல் இல்லை.

இன்று தனியார் பள்ளிகள் விலைவாசி ஏற்றத்தால்  மிகவும் கலக்கத்தில்
உள்ளன .

ஆசிரியர்கள்  ,ஆயாக்கள்   aஅனைவருக்கும்  ஊதியம் kகொடுக்க vவேண்டும்

பொருளின்றி   ஆண்டவன்   தரிசனமே  ஆலயங்களில்  தாமதமாக  கிடைக்கும் .

அறிவாலயங்கள்  என்றுமே அரசபோகம் தான் .







வியாழன், ஜூலை 19, 2012

EDUCATIONAL STRUGGLE WHY?




தனியார்  பள்ளியில் பின் தங்கிய, குறிப்பாக பொருளாதாரத்தில்  பின் தங்கிய

25% மாணவர்களை  தனியார்  பள்ளியில் சேர்க்கவேண்டும்  என்ற அரசு

 உத்தரவு  மிகவும் சிந்திக்க வேண்டிய  ஒன்று.
 பெங்களூர்  ஆக்ஸ் போர்டு  பள்ளியில்  25% மாணவர்களை அவமானப்படுத்துவதாக  செய்தி.
  25% மாணவர்களை ஏன்  தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும்? அரசுப்பள்ளிகள்  இயங்குகிறதா  இல்லையா?

தனியார் பள்ளி மாணவர் கள்   சிலர் கொண்டுவரும்  அழிப்பான்  ரூபாய் 50.

 அவர்கள்  வந்திறங்குவது    பல  லட்சங்கள்  மதிப்புள்ள மகிழுந்து.

  அவர்கள் எழுதும் குறிப்பேடு அரசாங்க வெளியிடும் குறிப்பேடு போல்
 இ ரண்டு-மூன்று  மடங்கு விலை உள்ளது.
போன்றே காலணி ;சீருடை;உணவி கொண்டுவரும் லஞ்ச்  பாக்ஸ். 
  இது மாணவர்கள் நிலை.

ஆசிரியர்கள் ஊதியம்.பள்ளி பராமரிப்பு,குடிதண்ணீர்,கழிப்பிடம் போன்ற

வசதிகளுக்கு சிலவு ,ஆண்டுதோறும் பள்ளியை புதுப்பித்தல் ,பேருந்து

வசதிகள்,ஒவ்வொரு வகுப்பறைக்கும் மின்வ்சதிகள்,தலைமை ஆசிரியரின்

குளிர் சாதன அறைகள்,ஆசிரியர்கள் அமர வசதியான

இருக்கைகள்,ஓய்வறைகள்,பெற்றோர்- மாணவர்கள் தங்கள் பள்ளியில்

அதிகம் சேரவேண்டும் என்ற  தளரா உழைப்பு; இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் 

என்ற ஒரு அரசு ஆணை மட்டும் தான்.பொருளாதார மானியம் என்பது ஒரு

 பைசா கிடையாது.

ஆனால் கடு பிடிகள் அதிகம்.  தர்ம  சிந்தனைகள் உள்ளவர்கள் தான் பள்ளிகள்

 நடத்தவேண்டும் என்றால் சராசரி சிலவுகள் கணக்கிட்டால்  கண்ணீர்தான் 

வரும்.


200  மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு குறைந்த பக்ஷம் ரூபாய் 5000/;ஊதியம் என்றால்  மாதம் ரூ.40,000/;
 ஆயா,துப்புரவுத்  தொழிலாளி தண்ணீர் எடுத்துவைப்பவர், பள்ளிகூட்டுவோர் மின்கட்டணம்,தொலைபேசிக்கட்டணம், முதலுதவி மராமத்து என்றவகையில் ரூ.15,000/
;நிர்வாகத்தினரின் அன்றாட மன உளைச்சல்  மாணவர்கள் பாதுகாப்பிற்கு மதிப்பிட முடியாது.

பள்ளிகள் துவங்கியதே வருமானத்திற்கு என்று  மனசாட்சி

உள்ளவர்களுக்குத்  தெரியும்.

  சில க ல்லூரி குறிப்பாக தனியார் பொறியியல்  கல்லூரி பேராசிரியர் 

ஊதியமே மாதம் 10,000/மட்டுமே
.அதைப்பற்றி யாருக்குக் கவலை .அவர் ஏன்   இப்பணிக்கு வரவேண்டும்.(இக்கல்லூ ரிகள் யார் நடத்துகின்றனர் என்பது உலகறிந்த ரகசியம்) சரி. 

ஒரு தொடக்கப்பள்ளி நடத்த  குறைந்த பட்ச சிலவு  மாதம் 60000/;
வருடம் 60,000 x 12 =  7,20,000/-

தர்மம் செய்பவர்கள் யார்.?

அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளிகள் ;கல்லூரிகள் 

 ;ஏழைகள் தன பிழைப்புக்காக   நடத்தும் பள்ளிகள் 

,அனைத்தும் மூடிவிட்டு அரசே பள்ளிகள் நடத்த முடியுமா?
 அனைத்துத் தரப்பு மக்களும் இதை  ஏற்பார்களா?

குளிர் சாதனா வண்டியில் பயணம் செல்வோர்,

 கட்டைவண்டியில் செல்வோர் என்ற பொருளாதார நிலை நம் நாட்டில்.

தனியார் பள்ளிகளால் அரசுக்கு பல கோடி சிலவுகள் மிச்சம்.

 கல்வி என்பது அரசர் ஆண்ட காலத்தில் இருந்து இன்று வரை 

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது

.ஒரு மகிழ்ச்சியான கசப்பான உண்மை

.  
அபதுல் கலாம் அரசுப்பள்ளியில் படித்தவர்.

  கமலஹாசனும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்.

   அரட்டை அரங்கம்  புகழ்  விசு அவர்களும் அரசு உதவி பெரும் பள்ளியில்

 படித்தவர்தான்.

   அறிவு,திறன் என்பது பற்றி திரு கமல் மற்றும் விசு அவர்களுக்குத்தெரியும்
.
  நான் படித்த மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் எவ்வளவு  ஒழுக்கமாக 

இருந்தனர் என்பதற்கு தேர்வு மையமே மாற்றப்பட்ட வரலறு உண்டு.

கல்வி சம்பந்த மான,  கட்டணம் சம்பந்தமான போராட்டம் தேவையா?

 விந்தையான  அரசியல்  என்றே தோன்றுகிறது.
  

தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் 

தொண்டாற்றுகின்றனர்  என்பதுதான்  உண்மை.




செவ்வாய், ஜூலை 17, 2012

goverment school facilities

பொது  மக்களே!
அறுபத்தேழு ஆண்டுகள் ஆகியும் இலவசக்கல்விக்காக

 போராட்டம் நடக்கிறது.

சென்னையில் போராட்டம்;சேலத்தில் போராட்டம்  என.

இலவச   அ ரசாங்க உயர்நிலைப்பள்ளிகள் ,ஆரம்பப்பள்ளிகள்  அரசாங்கம்
 
முற்றிலும்  மூடிவி ட்டதா?இல்லையே.

திருவல்லிக்கேணியில்  இந்து மேல்  நிலைப்பள்ளி,கெல்லட்,என்.கே.டி

 ' மாநகராட்சி , அரசுப்பள்ளிகள்,வெஸ்லி .மோனஹன்,சில்ரன்  கார்டன்

 ,சாந்தோம்,கோபால்ட்  என்று  இத்தனை அரசு உதவி பெறும்  பள்ளிகள்

இருந்தும் ,

பல மெட்ரி குலேசன்  பள்ளிகள்  இயங்கக்  காரணம்  பொதுமக்கள்

விரும்புவதால்  தான்.

அரசின் சலுகைகள்:
  1. இலவச  பாடநூல்கள்
  2. இலவச  பேருந்து  வசதி
  3. தாழ்த்தப்பட்ட பின்தங்கிய பிரிவினருக்கு  உதவித்தொகை
  4. விதவை,முன்னால் ராணுவ வீரர்கள்,துப்புரவுத்தொளிலாளர்
  5.  கு ;ழந்தைகள்  அனைவருக்கும் உதவித்தொகை,
  6. விபத்தில்  உயிர் இழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள்.
  7. மதிய உணவு    தி ட்டம்.
  8. மாற்றுத் திறனாளி  குழந்தைகளுக்கு  சலுகைகள்
  9. சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  உதவிப்பணம்
இன்னும் பல  நல திட்டங்கள்.
இலவச  குறிப்பேடுகள்,காலணி ,சீருடை,மிதிவண்டி,மடிகணினி,

இருப்பினும்  தனியார்  பள்ளிகள்  காந்தக்  கவர்ச்சி.

விடுதலை ஆகி  67 ஆண்டுகள்.கல்விக்குப்போராட்டம்.தேவையா?
அரசு  மருத்துவ மனை/தனியார்

அரசு  தொலை பேசி/தனியார்.

 விரும் புவோர்    செல்ல   வசதிகள்.

போராட்டம் தேவையா?அமைதியான  நடவடிக்கை

மக்கள்  தங்கள்  குழந்தை  களை   சே ர்ப்பதிலா?

அல்லது  அனைத்தும் அரசாங்கத்தால் ஈடு  செய்ய முடியுமா?

அரசுப்பேருந்துகள்  இருந்தும் ஆட்டோ ரிக்ஷாக்கள்,கால் டாக்சிகள் ,

தனியார் பேருந்துகள்.

எதையும் தடுக்க எதிர்க்க  ஆதரிக்க  மககளாட்சியில்  உரிமை உண்டு.

அவை நியாயமானதாக இருக்கவேண்டும்.

ஞாயிறு, ஜூலை 15, 2012

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?


எல்லாமே நன்மை  யாருக்கு ?

மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள்,பொது சொத்தை அளிக்காமலிருத்தல்,

சட்ட விதிகளை மீறாதிருத்தல்,

 கல்விக்கூடங்களை  மதித்தல் ,

ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல்,

ஆட்சி செய்பவர்களை மதித்தல்,

காவல் துறையைப் போற்றுதல் ,

பொது இடங்களை அசுத்தா மாக்காமல்  இருத்தல்,

வாக்களித்தலில் பெறுவதில் நேர்மை காட்டுதல்,

இவை  நமது  நாட்டில்  இல்லை  என்று கூறமுடியாது.

காரணம்  தர்ம தேவதையின்  தண்டனைகள் அதிகம்.

அதே நேரத்தில்  அவைகளை

 உணரா ,உணர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் தவிப்போர் பட்டியல் அதிகம்
.
அந்த பட்டியல்   கலியுக  தர்மம்   என்ற  மூட நம்பிக்கையில்

  நீண்டு கொண்டே செல்கிறது.

அதர்ம  வழியில் செல்வதே தர்ம  வழியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அரசாங்கம்  ஒரு விண்ணப்பம் பெற்று அதற்கு அனுமதி பெற மக்களை

அலைய வைக்கிறது.அதனால் மக்கள் நேரடியாக தங்கள் அலுவல்களை

விட்டுவிட்டு அலைவதால் நேரம்,பணம்  அனைத்தும் விரைய மாகிறது.

வேலை முடிவதில்லை.

அதற்கென  சில முகவர்களை அணுகினால் உடன்  பணி முடிந்து  விடுகிறது.

ஆட்டோவிற்கு  கொடுக்கும் பணம் முகவருக்கு.

இதில் பணம் இல்லாமல் நேர்மையாளர்களுக்கும் நியாயம்

கிடைக்கிறது.
அவனின் ஆயுள் காலம் முடியும் பொழுது அல்லது  ஆயுள் முடிந்த பின்.

இது அவன்  "அவன் தலை எழுத்து" என்ற மூட நம்பிக்கையால்

 மறைக்கப்படுகிறது.

நிர்வாகம் சரியில்லை என்று யாரும் கூறுவதில்லை.

சட்டம் ஓர் இருட்டறை என்ற அறிஞர்  அண்ணாவின் கூற்று மெய்யாகிறது.

அனால் அவர்  நாமம் கூறி மக்களுக்கு நாமம் போடும்  ஆட்சி

தொடர்கிறது.
ஏழைகள் எப்பொழுதும் போல் வெயிலில் நியாயவிலைக்கடைகளின்

 முன் நிற்பது  ஏழைகளின் தலை எழுத்து.

அந்த  நியாயவிலைக்கடைகள் பரிதாமமான இடத்தில்.

ரசீது போடுபவருக்கு வசதியாக அமர இடம் இருக்காது.

மூட்டைகள் இடிக்கும்.பக்கத்தில் திராசு.

.அங்கு நிறுத்துப்போடும் ஊழியர்  நிமிர்ந்து நிற்க இடம் இருக்காது.

அங்கு ஒரு சிறிய  ரவுடிகளின் சாம்ராஜ்யம்.

இது அனைவருக்கும் தெரிந்த ராஜ்ஜியம்.

அங்கு கூட்டம் சேரும் வரை பில்  போடமாட்டார்கள்.

கூட்டம் சேர்ந்த பின் தான் நிறுத்துப்போடுவார்கள்.

அது அவர்களுக்கு வசதி. பொதுமக்களுக்கு அவதி.

எல்லாம்  பொதுமக்கள்  தலைவிதி.

 இந்த நம்பிக்கை உள்ளவரை

அநீதி இழைப்போருக்கு நல்லதுதான்.

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?



வெள்ளி, ஜூலை 13, 2012

யார் குற்றம்?


யார்  குற்றம்?

அதிகமான  அரசுப்பள்ளிகளில்   கழிப்பிட  வசதிகள்  கிடையாது.

கழிப்பிட கட்டடங்கள் இருந்தாலும்  சுத்தமாக இருக்காது.

சுத்தமாக தண்ணீர் வசதி இருக்காது.

நீர்வசதிகள் இருந்தாலும்  மாணவர்கள் சிலரின் ஒழுங்கீனத்தால்

குழாய்கள் உடைக்கப்பட்டிருக்கும்.

தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கும்.

மாணவர்களுக்கு  முதலில் ஒழுக்கங்கள்  கற்பிக்கப்பட வேண்டும்.

ஆண்டுத் தேர்வின் இறுதிநாளன்று,பள்ளியின் பொது சொத்துக்களை பாழ் 

படுத்துவதில்  மாணவர்களுக்கு வரும்  ஆனந்தம்,ஆசிரியர்கள் படும் அல்லல் ,

இதைப்பயன் படுத்தி குளிர் காயும்  ஆசிரியர்கள் ,ஊழியர்கள்.

சிலர் மாணவர்களின்  இந்த செயல்களை வேடிக்கை பார்க்கும் காட்சிகள்.

மீண்டும் மராமத்து வவுச்சர்கள்  எழுதுவதில் காட்டும் தாராளம்.

இக்காட்சிகள்  பள்ளிகளில் மட்டுமல்ல;
 பொதுக்கழிப்பிடங்கள்,பொது குடி தண்ணீர்  வசதிகள் செய்யப்பட  இடங்கள்,ஆலயங்கள்  அனைத்து இடங்களிலும் காணப்படும்  அவலங்கள்.


ஆயுள்  காப்பீட்டு 14 மாடி கட்டட  மாடிப்படி  ஓரங்களில் வெற்றிலை பாக்கு

மென்று துப்பி ய எச்சல் . அதுவும்  மிகவும் படித்து பலரைக் கவர்ந்து  பிரிமியம்

பெற்று வரும்  முகவர்கள் என்ற அறிவு ஜீவிகள் செய்வது.

இதெல்லாம் யார்  குற்றம் .

அடிப்படைதவறுகள்  எங்கு ஏற்படுகின்றன.

 விடுதலை அடைந்து  பல

ஆண்டுகளுக்குப்பின்னும்  பொதுச்சொத்து

நம் சொத்து .அதை சேதப்படுத்தக் கூடாது  என்ற விழிப்புணர்வு வராததற்குக்

காரணம்  முறையான கல்வி இல்லை என்பதாலா?

அரசியலா? இயற்கை யான பண்பா/?!!

பூனா ,முபாய் சென்றால்  ஒரு காலடி எடுத்துவைத்து நடந்தால் எவ்வளவு

கவனமாக இருந்தாலும் பாண்-பராக் எச்சியை மிதிக்காமல் நடக்க முடியாது.

ஆலயங்களில்  குறிப்பாக திருவண்ணாமலை,பழனி போன்ற பெரும்  திரளாக

பக்தர்கள்  வரும் இடங்களில் கழிப்பிடம் என்பது  மிகவும் மோசமாக

  இருக்கும்.காரணம் போதிய கழிப்பிடங்கள் இல்லை
.
;இருக்கும்கழி ப்பிடங்களையும் பக்தர்களோ சுய நல வாதிகளோ

  சேதப்படுத்தி  இருப்பார்கள் .இக்கோவில்களுக்கு  கோடிக்கணக்கான

வருமானம் .

மதுரை,சென்னை  போன்ற நகரங்களில் போராட்டம் என்றால்

 அரசு பேருந்துகளை சேதப்படுத்துவதுதான்  முதலில்  நடக்கும்.

இந்த பேருந்துகளைத் தாக்குவது அரசியல் கொடிகள் வைத்துள்ள

கும்பல்களும் அதை பயன்படுத்தி  கொள்ளை அடிக்கும் சமுதாய

விரோதிகளும் தான்.அவர்கள்  மேல்  கடும்  நடவடிக்கை எடுத்தால் மீண்டும்

இச்செயல்கள்  நடக்காது.ஆனால் அதில் அரசியல் புகுவதால் ,

ஒரே  குற்றங்கள்  மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன  என்பதில் சற்றும்

ஐயமில்லை.

மக்கள் மனதில் மன  மாற்றம் தேவை.

பொதுச்சொத்துக்களை ,பொது இடங்களை சேதப்படுத்த மா ட்டோ ம் என்று.

மி ன் சார பல்புகள்  ஒரு  குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அடிக்கடி உடையும்.

ஒரு முறை இச்செயல் அடைந்ததும் கண்காணித்து கடும் தண்டனை

 அ ளித்தால்  அந்த இடத்திலேயே மீண்டும்   நடக்காது.

அந்த இடங்களில் அமோகமாக  பல சட்ட விரோத செயல்கள் நடக்கும்.

ஒரு ரவுடியோ திருடனோ பல முறை சிறை செல்ல ஆசைப்படும்   அளவுக்கு

  நமது நாட்டின் தண்டனைகள் உள்ளது வருந்தத் தக்கது.

 ஒரு ரவுடி ஒரு வழக்கறிஞரையோ/காவல் துறையினரையோ   அறைந்து

  விட்டு  நான் உள்ளே சென்று விட்டு ஓரிரு மாதங்களில் திரும்பி வ ந்து

விடுவேன். சட்டம்  உன்னை எப்படி பாதுகாக்கும் /என்னை  என்ன  செய்து
 வி டும்.??
என்கின்ற அளவிற்கு  தண்டனைகள் மலிவாகி விட்டன.
பொருள் சேர்ந்தால் குற்றங்கள் பொருளற்றதாகி விடும்.

பொறுக்கிகள் காவலதிகாரிகளை அடித்து

நாயகனாவது தான்  இன்றைய திரைப்பட  கதைகள்.



ஆசிரியர்களும் தண்டனைகளும்



ஆசிரியர்களும்  தண்டனைகளும்

      தண்டனைகள்  என்பது மாணவர்களுக்குத்  தேவையா ?இல்லையா?

 என்ற  வினா  எழும் பொழுது  மாணவர்கள்  தங்கள் தவறுகளை  உணரும்

அளவிற்கு தண்டனை  கொடுத்தால்

 அந்த ஆசிரியர்களுக்கு  மதிப்பு  அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஆசிரியரின்  கோபமும் தண்டனையும்  மூர்க்கத்தனமாக  இருக்கும்

பொழுது  அந்த  ஆசிரியரின்  மதிப்பு  குறைகிறது.

எனது ஆசிரிய பணிக்கால  அனுபவத்தில்  மாணவர்கள்  தவறு செய்வது,

மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது,

வகுப்பில் இரைச்சலிடுவது  அனைத்திற்குமே  ஆசிரியர்களின்

 நடத்தை  தான்  காரணமாகிறது.

சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வகுப்பில் அமைதி ,ஒழுங்கு

கட்டுப்பாடு  இருக்கத்தான் செய்கிறது.

ஆசிரியர்கள் சிலர் தவறான சொற்களை வகுப்பில் பயன்படுத்தும் பொழுது

மிகவும்  சிக்கல் ஏற்படுகிறது.

சில மாணவர்களும்  வகுப்பறையில்  ஆசிரியரை  அவமதிப்பதில்

ஆனந்தமடைகின்றனர்

 பயிற்சி  ஏடுகள்  அறிவியல் பாடத்தில்  எழுதி
 ,
அந்த   தேர்விற்கு  முன்  பெறுவது  என்பது

அரசு,மாநகராட்சி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மிகவும்  கடினம்.

தனியார்  பள்ளிகளில்  பெற்றோர்கள் காட்டும் அக்கறை

 இப்பள்ளிகளில்  காட்டுவதில்லை.

  தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தாமதமாக வருவதில்லை.

அரசு  சார்ந்த பள்ளிகளில் மாணவர்கள் தாமதமாகவே வருகின்றனர்.

ஒரு  பெற்றோரின் கூற்று எனக்கு வியப்பளித்தது.

என் இரண்டாவது பையனை பள்ளியில் விட்டு விட்டு வந்ததால்

என் மூத்த பையன் தாமதமாகிவிட்டது.

அந்த பள்ளி கேட்  மூடப்பட்டுவிடும்.

இங்கே அப்படி இல்லையே.நான் படிக்கும் போதே

 தாமத மாகத்தானே வந்தேன்.

தனியார் பள்ளிகளின்  சட்ட திட்டங்களுக்கு

  ஒழுக்கம் என்று கட்டுப்படும் பெற்றோர்கள்
,
அரசுப்பள்ளி என்றாலே  அலட்சியம் தான் காட்டுகின்றனர்.

இந்த நிலை மாறவேண்டும்.


(தொடரும்)

புதன், ஜூலை 11, 2012

கல்விக்கூடங்கள் ஆசிரியர் நிலை --2




ஆசிரியர்கள்  நிலை பற்றி கூறிய பின் ,

ஆசிரியர்கள் செயல்பாடுகள் குறித்தும்

விளக்க வேண்டி உள்ளது.

ஆசிரியர்கள்  பாடம் நடத்தும்  போது

 பாடத் திட்டத்தில்  மட்டுமே  கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

இன்றைய மாணவர்களுக்கு பல விஷயங்கள்

தெரிந்துள்ளன.அவன் கவனம் முழுவதும் வகுப்பறையில் இருக்க வேண்டும்.

அவனுக்கு வீட்டிலும் பல பிரச்சனைகள்  உள்ளன.

சில மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றால் ,

அவன் பெற்றோர்கள் வரும் வரை வீட்டு  வாயிலிலேயே  காத்திருக்க

வேண்டிஉள்ளது.சில நேரங்களில்  பெற்றோர்கள் தாமதமாக

வருகின்றனர்.

மாணவர்களின்  தனிப்பட்ட இவ்வாறான பிரச்சனைகளையும் ஆசிரியர்கள்

கவனிக்கவேண்டும்.


 ஒரு முதலாம் வகுப்பு மாணவன் குறிப்பேட்டிற்கு அட்டை போடவில்லை

என்று  ஆசிரியை  மிகவும் கேவலப்படுத்தியதுடன் ,ஒரு அட்டையில் indicipline

boy  என்று எழுதி அன்று முழுவதும் அவன் நெற்றியில்  கட்டி வைத்து

அவமான  படுத்தி உள்ளார்.
அந்த 5-6 வயது குழந்தை மனம் எவ்வளவு புண் படும் என்று நினைக்கவில்லை.

சிலர் ஒரு மாணவன் செய்யும் தவறுக்கு  அந்த வகுப்பறையில் உள்ள

அனைத்து மாணவர்களுக்கும் தண்டனை அளிக்கின்றனர்.

ஆங்கில வழி  பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் அக்கறை தமிழ் வழி

பயிலும் மாணவர்களுக்கு அளிப்பதில்லை.காரணம் அதிகமான பெற்றோர்கள்

படிக்காதவர்கள்  மட்டும் அல்ல ;வறியவர்களும் கூட.

சமுதாயமும் அவர்களை மதிப்பதில்லை.எனக்குத் தெரிந்த தமிழ் வழியில்

எம்.காம்; படித்தவருக்கு வேலைக்கு  நேர்காணல் செல்லும்  பொழுது

அவமானம் தான் ஏற்பட்டது.

தாய்மொழியில்  பேசினாலே அவன் அவமானப்பட  வேண்டிய நிலை.

படத்தலைப்பு  தமிழில் வைத்தால் ,வரி விலக்கு .ஆனால்,பாடல்கள்

ஆங்கிலத்தில்  இருக்கலாம்.

இந்நிலை உள்ளவரை கல்வித்தரம் ,ஏற்றத் தாழ்வுகள்,

கட்டணங்கள் எப்படி  மாறும்.

விடுதலை அடைந்த பின்  நாட்டின் நிலை.ஆங்கிலமின்றி வேலை கிடையாது.

கல்விக்கூடங்கள் ஆசிரியர் நிலை --2
(தொடரும்)

ஆசிரியர்களும் தண்டனைகளும்-pakuthi-1

ஆசிரியர்களும்  தண்டனைகளும்.

     சமீபகாலமாக  ஆசிரியர்கள்  அளிக்கும் தண்டனைகள்  குறித்து சேதிகள்

வந்த வண்ணம்  உள்ளன.


ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு  நல்வழிகாட்டிகளாக  இருந்த காலம்  போய்

,அவர்கள் அரசாங்க ஊதியம் பெரும் தொழிலாளிகளாக  மாற்றிய  பெருமை

 ஆங்கில அரசாங்கத்தையே  சாரும்.அதற்குக்  காரணம்  நமது நாட்டின் 

குருகுலக்கல்வி  முறை.

பக்த பிரகலாதன் கல்வி  பயின்றபோது  குரு  அரசருக்கு பயந்து  கல்வி

போதித்தார். இன்று  ஆசிரியர்கள்  கல்வி அதிகாரிகள்,தனியார் பள்ளி

நிர்வாகிகள்,பள்ளி  முதல்வர்கள்,பயிலும்  மாணவர்கள்,பெரும் ஊதியங்கள்,

தனிவகுப்பு  கட்டண ங்களுக்கு வரும்  பெற்றோர்கள்,இளம் பிராயத்திலேயே

மன வளர்ச்சி ,அறிவுத்திறன் பெற்ற மாணவர்கள்  என அனைவருக்கும்

பயந்தே  கற்பிக்கவேண்டிய  சூழல்.

இவர்களைத்  தவிர  திரைப்படங்கள்,சின்னத்திரைகள்  அனைத்திலும்

ஆசிரியர்கள்  என்றாலே  கேலியும் கிண்டலும் தான்.

இதில் வியக்கத்தக்க  சிந்திக்கத்தக்கது  என்னவென்றால்

 எதிர்கால  நாட்டின் சிற்பிகளை  உருவாக்கும்  கல்வித்துறை,

நாட்டின் சட்ட ஒழுங்கை  நிர்வகிக்கும்  காவல்துறை,

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அரசியல் அமைச்சர்கள்

 அனைவரையுமே  கேலியும் கிண்டலும் அவமானப்படுத்துவதும் தான்.

ஒருநாட்டின் முதல்வராக கலைஞராக  இருந்தவர் எடுத்த கதையாகிய

பாலைவன ரோஜாக்கள்  கதையின் முடிவு  நீதி நியாயங்கள்  குழி தோண்டி

புதைக்கப்படும்  என்பதுதான்.

 இந்த பரிதாப   கேலி கிண்டலுக்கு  ஆளான மூன்று துறைகளுமே

 அதாவது  அரசியல்,கல்வி ,காவல் மூன்றுமே இன்று  ஊழலின் 

சாம்ராஜ்யமாக  இருப்பதுதான்.
(தொடரும்)